உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், நவம்பர் 02, 2010

கடலூர் மாவட்டத்தில் 9-ம் தேதி முதல் 28 கிராமங்களில் கால்நடை பாதுகாப்பு முகாம்கள்

கடலூர்:

              கடலூர் மாவட்டத்தில் 9-ம் தேதி முதல் 28 கிராமங்களில் கால்நடை பாதுகாப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

                   2000ம் ஆண்டு தமிழக முதல்வரால் தொடங்கப்பட்ட கால்நடை பாதுகாப்புத் திட்டம், கால்நடை பராமரிப்புத் துறையினரால் ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம்களில் சிறந்த கால்நடை மருத்துவர்கள் பங்கேற்று, கால்நடைகளுக்கு செயற்கைக் கருவூட்டல், பசுக்களின் மலட்டுத் தன்மை நீக்கல், நோய்தடுப்பு ஊசிகள் போடுதல், சினைப் பரிசோதனை, குடற்புழு நீக்கம் செய்தல் மற்றும் மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட அனைத்தும் இலவசமாக மேற்கொள்ளப்படும். சிறந்த கன்றுகளுக்கு பரிசும் வழங்கப்படும்.

கால்நடை மருத்துவ முகாம்கள்: 

                   9-ம் தேதி அழகப்பெருமாள் குப்பம், செüந்தர சோழபுரம், சி.சாத்தமங்கலம், 10-ம் தேதி சர்வராஜன்பேட்டை, தென்குத்து, 11-ம் தேதி வேளங்கிப்பட்டு, கிளிஞ்சிக்குப்பம், அரசக்குழி, நடியப்பட்டு, வடபாதி, 12-ம் தேதி கரிவெட்டி, 15-ம்தேதி ஆலம்பாடி, 16-ம் தேதி கண்டமங்கலம், திருக்கண்டேஸ்வரம், 17-ம் தேதி டி.வி.புத்தூர், 18-ம் தேதி அரியகோஷ்டி, இருளக்குறிச்சி, ஆக்கனூர், 19-ம் தேதி சிவபுரி, 20-ம் தேதி காட்டுக் கூடலூர், 21-ம் தேதி பரவளூர், 24-ம் தேதி ரங்கநாதபுரம், கொக்கரசன் பேட்டை, 24-ம் தேதி காவாலக்குடி, 25-ம் தேதி ஒதியடிக்குப்பம், மாளிகைக் கோட்டம்,  26-ம் தேதி ஜெயங்கொண்டான், கீழிருப்பு ஆகிய கிராமங்களில் நடைபெறும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior