கடலூர்:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கடலூரில் திங்கள்கிழமை, கோரிக்கை ஊர்வலம் நடத்தினர்.
குள்ளஞ்சாவடி அருகே புலியூர் காலனியில் இரவு நேரங்களில் குடிசைகளைக் கொளுத்துவோரைத் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். புலியூர், வசனாங்குப்பம், மக்களுக்கு மாற்று இடம் தேர்வு செய்து, குடியமர்த்த வேண்டும் அல்லது தீப் பிடிக்காத வீடுகளைக் கட்டிக் கொடுக்க வேண்டும். புலியூர் வசனாங்குப்பம் காலனி மக்களுக்கு தெருவிளக்கு, சாலைவசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்துகொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஊர்வலம் நடந்தது.
திருப்பாப்புலியூர் உழவர் சந்தை அருகில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அடைந்தது. ஊர்வலத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் சு.திருமாறன் தலைமை வகித்தார். மாநில நிர்வாகி திருமார்பன், துணைச் செயலாளர்கள் அறிவுடைநம்பி, செல்லப்பன், முல்லைவேந்தன், திருமேனி வழக்கறிஞரணி செயலாளர் காத்தவராயன், குறிஞ்சிப்பாடி ஒன்றியச் செயலாளர் சுந்தர், கடலூர் நகரச் செயலாளர் பாவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தின் முடிவில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக