சிதம்பரம்:
காட்டுமன்னார்கோவிலில் உள்ள திருமண மண்டபத்தில் வாழ்ந்துக் காட்டுவோம் திட்டத்தின் கீழ் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்ற கிராமப் புற பெண்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.
மாவட்ட திட்ட மேலாளர் நித்தியானந்தம் தலைமை வகித்தார். உதவித் திட்ட மேலாளர் சிட்டிபாபு முன்னிலை வகித்தார். சென்னையைச் சேர்ந்த தனியார் ஆயத்தஆடை நிறுவனம் பங்கு கொண்டு எழுத்துத் தேர்வு மூலம் பணிக்கு ஊழியர்களை தேர்வு செய்தனர். 400 பேர் பங்கேற்ற இந்த வேலைவாய்ப்பு முகாமில் 250 பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களுக்கு பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என மாவட்ட திட்ட மேலாளர் நித்தியானந்தம் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக