கிள்ளை :
சிதம்பரம் அடுத்த முடசல்ஓடை, சின்ன வாய்க்கால் மற்றும் பில்லுமேடு முகத்துவாரங்களை 30 லட்சம் ரூபாய் செலவில் தற்காலிகமாக ஆழப்படுத்தும் பணி துவங்கியது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே முடசல்ஓடை, சூரியா நகர், கூழையார், எம்.ஜி.ஆர்., திட்டு, முழுக்குத்துறை, பில்லுமேடு, சின்ன வாய்க்கால் சுற்றுப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் அன்னங்கோவில், சின்ன வாய்க்கால் மற்றும் பில்லுமேடு முகத்துவாரங்கள் வழியாக கடலுக்கு சென்று மீன் பிடித்தொழில் செய்து வந்தனர். இந்த முகத்துவாரங்கள் கடந்த நான்கு ஆண்டிற்கு முன் மணல் மேடானதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர். முடசல்ஓடை சிங்காரவேலர் விசைப் படகு உரிமையாளர் சங்கத்தினர் மீன் வளத்துறை அமைச்சரை சந்தித்து, முகத்துவாரங்களை ஆழப்படுத்த கோரிக்கை விடுத்தனர்.
கடந்த ஆண்டு முகத்துவாரங்களை பார்வையிட்ட அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பழையாறில் உள்ளது போல் 10 கோடி ரூபாய் செல வில் முகத்துவாரம் அமைக்கப்படும் எனக் கூறினர். அதன்படி முடசல்ஓடை முகத்துவாரத்தை 270 மீ., நீளம், 30 மீ., அகலம், 1.5 மீ., ஆழத்திலும், சின்னவாய்க்கால் மற்றும் பில்லுமேடு முகத்துவாரங்களை 180 மீ., நீளத்திற்கு 15 மீ., அகலத்தில் ஒரு மீ., ஆழத்திற்கு தூர்வாரும் பணியை தமிழ்நாடு மீனவர் நலவாரிய உறுப்பினர் சத்தியமூர்த்தி துவக்கி வைத்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக