உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், நவம்பர் 02, 2010

கடலூர் மாவட்டத்தில் தீபாவளியையொட்டி கடைகளில் வியாபாரம் களைகட்டுகிறது : கடைவீதிகளில் குவியும் மக்கள் கூட்டம்

கடலூர் : 

                   தீபாவளிப் பண்டிகையையொட்டி கடைகளில் வியாபாரம் சூடுபிடித்துள்ளதால் மாவட்டம் "களை' கட்டியுள்ளது. சூரனை வதம் செய்த நாளைத் தான் நாம் தீபாவளிப் பண்டிகையாக கொண்டாடி வருகிறோம். தமிழர்கள் கொண்டாடும் பண்டிகைகளிலேயே தீபாவளியைத்தான் மக்கள் அதிக உற்சாகத்துடன் கொண்டாடுவது வழக்கம். பொதுவாக தீபாவளிப் பண்டிகை அக்டோபர் கடைசி அல்லது நவம்பர் முதல் வாரத்திலும் வரும். அப்போது தமிழகத்தில் மழைக் காலமாக இருப்பதால் அடைமழை பெய் யும். இதன் காரணமாக சில சமயங்களில்  வெள் ளப்பெருக்கு ஏற்பட்டு பொது மக்கள் பாதிப்படையும் சூழ்நிலை நிலவும்.

                             பண்டிகை அமாவாசையின் போது வருவதால் இடைவிடாது கனமழை பொழிந்து மக்கள் பொருட்கள் வாங்க கூட முடியாமல் அவதிப்பட்ட காலங்களும் உண்டு. ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக பருவமழை தாமதமாக துவங்கியது தீபாவளி கொண்டாடுவோர்களுக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. 

                         அதுவும் இதுவரை மழை தீவிரம் அடையாமல் மிதமான மழை பெய்து வருவதால் மக்கள் எவ்வித சிரமமுமின்றி கடைகளில் பொருட்கள், புத்தாடைகள், இனிப்பு வகைகள் வாங்கி குவித்து வருகின்றனர். தீபாவளிப் பண்டிகை இன்னும் 2 நாட்களே இருப்பதால் மக்கள் பொருட்களை வாங்க கடைவீதிகளில் குவிந்து வருகின்றனர். மேலும் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டு விட்டதால் மக்கள் மகிழ்ச்சியுடன் கடைகளில் பொருட்களை வாங்கி செலவழித்து வருகின்றனர்.

                       கடலூர் நகரில் குறிப் பாக லாரன்ஸ் ரோடு, தேரடித்தெரு, பான்பரி மார்க் கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதேப்போல மஞ்சக்குப்பம் சுதர்சனம் நாயுடு வீதி, முதுநகர் மார்க்கெட் பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கூட்ட நெரிசலினால் மாலை 6 மணி முதல் லாரன்ஸ் ரோடில் வாகனங்களில் செல்ல முடியவில்லை. 

                        துணிக்கடைகளில் காலை முதல் இரவு வரை மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. சில துணிக்கடைகளில் கூட்ட நெரிசல் காரணமாக வியாபாரம் கவனிக்க முடியாததால் கடை வியாபாரிகள் இடைவெளி கொடுத்து கடைகளுக்குள் அனுப்புகின்றனர். இதனால் மக்கள் மணிக்கணக்கில் காத்திருந்து கடைகளுக்குள் செல் லும் நிலை உள்ளது. இதேப்போல பட்டாசுக் கடை, ஓட்டல்கள், இனிப்பு கடைகளிலும் வியாபாரம் சூடுபிடித்துள்ளது.

                  போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவற்காகவும், திருடர்களிடமிருந்து பொது மக்களை காப்பாற்றவும் போலீசார் நெரிசல் மிகுந்த முக்கிய வீதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து சீர்படுத்தி வருகின்றனர். இதேப்போல பண்ருட்டி, விருத்தாசலம் பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. 

சிதம்பரம்: 

                        தீபாவளிப் பண்டிகையையொட்டி சுற் றுப்புற கிராம பகுதிகளை சேர்ந்தவர்கள் சிதம்பரம் நகருக்கு வர துவங்கியுள்ளனர். இதனால் சிதம்பரம் நகரத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. குறிப்பாக மேல வீதியில் துணிக்கடைகள், நகைக்கடைகள் மற்றும் நடைபாதை கடைகள் அதிகமாக உள்ள நிலையில் மாலை நேரங்களில் கட் டுப்படுத்த முடியாத அள வில் கூட்ட நெரிசல் உள்ளது. 

                        அதையொட்டி போக்குவரத்து சீரமைக்க போலீசார் பாதுகாப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். மேல வீதியில் இன்று (1ம் தேதி) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. நேற்று மாலையே மேல வீதி வழியாக போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டது. இரு சக்கர வாகனங்கள் தவிர மற்ற வாகனங்கள் மேல வீதியில் நிறுத்த அனுமதிக்கப்படாமல் வடக்கு வீதியில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior