உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், நவம்பர் 02, 2010

திட்டக்குடி அருகே இரண்டு "கான்கிரீட்' வீடுகள் இடி தாக்கி சேதம்




திட்டக்குடி : 

                   கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே, கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டு வீடுகள், இடி தாக்கி பலத்த சேதமடைந்தன. 

                   தமிழகம் முழுவதும் குடிசை வீடுகள் இல்லாத மாநிலமாக உருவாக்க, கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், "கான்கிரீட்' வீடு கட்டிக் கொடுக்கப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டம் மங்களூர் ஒன்றியத்தில் இத்திட்டத்தின் கீழ் 1,786 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, கட்டுமானப் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. கடந்த நான்கு நாட்களாக திட்டக்குடி பகுதிகளில் கனமழை பெய்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. 

                 திட்டக்குடி அடுத்த நெடுங்குளம் கிராமத்தில் விழுந்த பலத்த இடி, வடக்குத் தெருவில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் மணிவேல் மனைவி செல்வி மற்றும் பக்கத்து வீடான கணேசன் மனைவி மலர்கொடி வீடுகளை தாக்கியது. இரண்டு வீடுகளின் கீழ்ப்புற, "கான்கிரீட்' தளங்கள் முற்றிலும் பெயர்ந்து, சுவரில் விரிசல் ஏற்பட்டு, வீடுகள் சரிந்து விழும் அபாய நிலையில் உள்ளன. ஊராட்சித் தலைவர் கணபதி கொடுத்த தகவலின் பேரில் தாசில்தார் கண்ணன், வருவாய் ஆய்வாளர்  ராமச்சந்திரன், வி.ஏ.ஓ., கருணாகரன் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டனர். 

இது குறித்து தாசில்தார் கண்ணன் கூறுகையில், 

                      "இரண்டு பயனாளிகளுக்கும் கட்டுமான பணிக்கென இருதவணைகளாக தலா 21 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. பணிகள் நிறைவடையும் நிலையில், "இடி' தாக்கி பக்கத்து பக்கத்து வீடுகள் சேதமடைந்துள்ளன. இரு வீடுகளையும் முழுமையாக அகற்றி, மீண்டும் புதிய வீடு கட்டித்தர சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்படும்' என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior