skip to main |
skip to sidebar
பழுது பார்க்கப்படாத தேர்
கடலூர், நவ.15: நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோயில் தேர், பழுது பார்க்கப்படாத நிலையில், அண்மையில் பெய்த மழையால் முற்றிலும் சிதைந்து கிடக்கிறது.
கடலூர் அருகே திருச்சோபுரம் கிராமத்தில் அமைந்து இருப்பது பழைமை வாய்ந்த திருச்சோபுர நாதர் கோயில். இது திருஞான சம்பந்தரால் பாடல்பெற்ற ஸ்தலம் ஆகும். பல நூற்றாண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கடல் கோளால் இப்பகுதி முழுவதும் கடல் நீரால் சூழப்பட்டு மண்ணால் மூடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர் கடல் தன் இயல்பு நிலைக்குத் திரும்பிய பின்னர், இப்பகுதி முழுவதும் மணல் குன்றுகளாக இருந்ததாகவும், அத்தகைய மணல் குன்று ஒன்றில் இருந்து திருச்சோபுர நாதர் கோயில் தோண்டி எடுக்கப்படதாகவும் வரலாறு தெரிவிக்கிறது. இத்தகைய பழம் பெருமை வாய்ந்த திருச்சோபுரநாதர் கோயில் தேர் 100 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. ஆனால் அந்தத் தேர் சிதைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. தேரில் உள்ள மரச்சிற்பங்கள் மிகவும் அழகு வாய்ந்தவை. புதிய தேரில் பழைய மரச்சிற்பங்கள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டது.
ஓராண்டுக்கு முன் இத்தேரை புதுப்பிக்க அறநிலையத்துறை ரூ. 12 லட்சத்துக்கு டெண்டர் விட்டது. கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ஒருவர், டெண்டர் எடுதததாகக் கூறப்படுகிறது. ஆனால் தேரைப் பழுதுபார்க்கும் பணி தொடங்கப்ட வில்லை. ஓலைக் கொட்டகை போட்டு அதனுள் தேர் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அண்மையில் பெய்த கன மழையில் கொட்டகையும் சிதைந்து தேர் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக