உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 08, 2010

மாவட்டத்தில் 2.40 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

கடலூர் : 

               மாவட்டத்தில் நேற்று 2.4 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப் பட்டது. விடுபட்ட குழந் தைகளுக்கு இன்று வீடு தேடி சென்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
               இளம்பிள்ளை வாத  நோயை ஒழித்திட ஆண்டிற்கு இருமுறை சிறப்பு முகாம்கள் நடத்தி ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந் தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப் பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண் டிற்கான இரண்டாம் கட்ட சிறப்பு முகாம் நேற்று நடந்தது. அதில்  மாவட்டத்தில் அமைக்கப்பட்ட 101 சிறப்பு மையங்கள் உட்பட 1613 மையங்களில் 2 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதனை சுகாதாரத்துறை இணை இயக்குனர் மீரா  மற்றும் அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டார்.
 
                  கடலூரில் நகராட்சி பயணிகள் விடுதியில்  டி.ஆர்.ஓ., நடராஜனும், கடலூர் ரோட்டரி சங்கம் சார்பில் புதுப்பாளையம் நகர் நல மையத்தில் அரசு தலைமை மருத்துவமனை ஆர்.எம்.ஓ., டாக்டர் கோவிந்தராஜனும் துவங்கி வைத்தனர். பேராசிரியை ஜெயந்தி ரவிச்சந்திரன், முன்னாள் மாவட்ட ஆளுனர் ஜெயச்சந்திரன், டாக்டர் ராமகிருஷ்ணன் பங்கேற்றனர். பண்ருட்டி பஸ் நிலைய முகாமை கமிஷனர் உமாமகேஸ்வரி தலைமையில் சேர்மன் பச்சையப்பன் துவக்கி வைத்தார். இதில் துணை சேர்மன் கோதண்டபாணி, சுகாதார ஆய்வாளர் கள் மணிகண்டன், சுதாகர், ஆல்பர்ட் ஞானதீபம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நெல்லிக்குப்பம் நகராட்சியில் நடந்த முகாமை சேர்மன் கெய்க் வாட்பாபு துவக்கி வைத்தார். இன்ஜினியர் புவனேஸ்வரி, மேலாளர் சம்பந்தம், சுகாதார அலுவலர் கிருஷ்ணகுமார், ஆய் வாளர் அரிநாராயணதாஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 
                      சிதம்பரத்தில் சேர்மன் பவுஜியாபேகம் தலைமையில் துணைத்தலைவர் மங்கையர்கரசி போலியோ சொட்டு மருந்து முகாமை துவக்கி வைத்தார். இதில் கமிஷனர் ஜான்சன் உள்ளிட் டோர் பங்கேற்றனர். நேற்று நடந்த சிறப்பு முகாமில் விடுபட்ட குழந்தைகளுக்கு இன்று வீடு தேடி சென்று சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior