திட்டக்குடி :
அறுவை சிகிச்சையால் இறந்த குழந் தையின் உடலை பரிசோதனை செய்வதில் சிக்கல் நீடித்து வருகிறது.
திட்டக்குடி அடுத்த கொடிக்களம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (28). இவரது 15 மாத குழந்தை சந்தோசின் ஆணுறுப்பு வீங்கியது. உடன் பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு 30ம் தேதி அறுவை சிகிச்சை முடிந்த சில மணி நேரத்தில் இறந்தார். பின்னர் குழந்தையின் உடன் அவரது சொந்த கிராமத்தில் புதைக்கப்பட்டது.
இந்நிலையில் குழந்தையின் தந்தை ராஜா டாக்டரின் தவறான அறுவை சிகிச் சையால் குழந்தை இறந்துவிட்டதாக நேற்று முன்தினம் பெரம்பலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, ஆனினங்குடியில் புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பரிசோதனை செய்திட அனுமதிகோரி திட்டக்குடி தாசில்தாருக்கு மனு கொடுத்தார். இந்நிலையில் குழந்தையின் தந்தை ராஜாவின் நிபந்தனையின்படி, சிறப்பு குழந்தை நல டாக்டர், சிறுநீரகவியல் துறை நிபுணர்கள், ரசாயன நிபுணர்கள் இங்கு பணியாற்றாத காரணத்தினால் பிரேத பரிசோதனை செய்திட இயலாது என திட்டக்குடி அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதனையடுத்து திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிந் துரை செய்து தாசில்தார் கண்ணன் கடிதம் அனுப்பியுள்ளார். இதனால் குழந்தையின் உடலை பரிசோதனை செய்வதில் சிக்கல் நீடித்து வருகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக