ராமநத்தம் :
ராமநத்தம் அடுத்த ஆவட்டியில் கக் கன் நினைவு வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட செயலாளர் கார்த்திக், அறக்கட்டளை தலைவர் காசிலிங்கம், துணை செயலாளர் ராமு, பொடையூர் மன்ற தலைவர் பால்சாமி முன்னிலை வகித்தனர். ம.பொடையூர் மன்ற பொருளாளர் மதியழகன் வரவேற்றார். இதில் கக்கன் நினைவு வளர்ச்சி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டாக்டர் சரவணகுமார் தலைமை தாங்கி பிப். 7 ம் தேதி திட்டக்குடியில் மக்கள் குறை கேட்க வரும் கடலூர் தொகுதி எம்.பி., அழகிரிக்கு அறக்கட்டளை சார்பில் சிறப்பு வரவேற்பு அளிப்பது, சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ம.பொடையூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் விபத்தின்றி சென்று வர பள்ளிக்கு எதிரே துணை வழிச்சாலை அமைக்க கோருவது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முருகேசன் நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக