கடலூர் :
மாணவர்களுக்கு வழங்க வேண்டிய வினா - விடை கையேடு பொதுத் தேர்வு நெருங்கி விட்ட நிலையில் இன் னும் வழங்காததால், இந்தாண்டு தேர்ச்சி சதவீதம் பாதிக்குமோ என்ற அச்சம் தலைமை ஆசிரியர்களிடையே எழுந் துள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளை பொறுத்தவரை தமிழத்தில் உள்ள 30 வருவாய் கல்வி மாவட் டங்களில் கடலூர் மாவட் டம் 29வது இடத்தில் இருந்து வந்தது. பிற மாவட்டங்களைப் போல் தேர்ச்சி சதவீதத்தை அதிகரித்து முன்னேற வேண்டும் என மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் பகீரத பிரயத்தனம் செய்து வருகின்றனர். 2008-2009ம் கல் வியாண்டில் அப்போது இருந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி குப்புசாமி "டல் ஸ்டூடண்ட்'களை (மெல்ல கற்கும்) கண்டறிந்து அவர் களுக்காக தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுவதற்கான வினா - விடை கையேட்டை தயாரித்தார்.
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 பாடப் பிரிவுகளில் தமிழ், ஆங்கிலம் உள் ளிட்ட அனைத்து பாடங்களுக்கும் கையேடு தயாரித்து கடந்த ஆண்டு நவம் பர் மாதம் 24ம் தேதி அமைச்சர் பன்னீர்செல்வமும், அப்போதைய கலெக்டர் ராஜேந்திர ரத்னுவும் வெளியிட்டனர். அடுத்த ஒரு வாரத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி மாணவர்களுக்கு வழங்கி அதனை கற்பித் திட ஆசிரியர்களுக்கு பயிற்சியும் அளிக்கப் பட்டது.
இது கடலூர் மாவட்ட தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதோடு மட்டுமின்றி விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ் சிபுரம், திருவாரூர் உள் ளிட்ட தேர்ச்சியில் பின் தங்கிய மாவட்ட கல்வி அதிகாரிகளும் பின்பற்றினர். இந்த புதிய முயற்சியின் பலனாக 29வது இடத்தில் இருந்த கடலூர் மாவட் டம் கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சியில்., 26வது இடமும், பிளஸ் 2வில் 24ம் இடத்திற்கும் முன்னேறியது. கடைசி இடத்தில் இருந்த விழுப்புரம் மாவட்டம் முறையே 23 மற்றும் 25வது இடத்தை பிடித்தது.
ஆனால் இந்த ஆண்டு "டல் ஸ்டூடண்ட்'டுகளுக் கான குறைந்தபட்ச மதிப் பெண் பெறுவதற்கான கையேடு கடலூர் மாவட் டத்தில் இதுவரை வழங் கப்படவில்லை. விழுப்புரம் மாவட்டத்தில் அரையாண்டு தேர்வு முடிந்தவுடன் வழங்கி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து மாணவ, மாணவிகள் படித்து வரும் நிலையில் இங்கு வழங்காதது ஏன் என தெரியவில்லை. பிளஸ் 2 மாணவர்களுக்கு தற்போது செய்முறை தேர்வு நடந்து வருகிறது. மார்ச் 1ம் தேதி தேர்வு துவங்க உள்ள நிலையில் இதன் பிறகு வழங்கினாலும் அந்த கையேட்டை வைத்து மாணவர்கள் படித்து தேர்ச்சி பெற முடியுமா என்பது சந்தேகமே.
எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு மார்ச் 23ம் தேதி தேர்வு துவங்குகிறது. அவர்களுக்கேனும் "வினா-விடை' கையேட்டை வழங்கிட மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுபற்றி தலைமையாசிரியர்கள் கூறுகையில், "கடந்த ஆண்டு குறைந்தபட்ச மதிப்பெண் பெறுவதற்கான கையேடு நல்ல பலனை அளித்தது. கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் அரையாண்டு தேர்வு முடிந்ததும் மாணவர்களுக்கு வழங்கியிருக்கலாம். ஒரு நல்ல திட்டத்தை செயல்படுத்தி அதற்கான பலன் உடனடியாக தெரிந்த போதிலும் அந்த திட்டத்தை தொடர்ந்து உரிய நேரத் தில் நடைமுறைப்படுத்தாதது ஏன் என்று புரியவில்லை. இதன் பிறகு கையேடு வழங்கினாலும் பலன் குறைவாகத்தான் இருக்கும்' என்கின்றனர்.
இதுபற்றி தலைமையாசிரியர்கள் கூறுகையில், "கடந்த ஆண்டு குறைந்தபட்ச மதிப்பெண் பெறுவதற்கான கையேடு நல்ல பலனை அளித்தது. கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் அரையாண்டு தேர்வு முடிந்ததும் மாணவர்களுக்கு வழங்கியிருக்கலாம். ஒரு நல்ல திட்டத்தை செயல்படுத்தி அதற்கான பலன் உடனடியாக தெரிந்த போதிலும் அந்த திட்டத்தை தொடர்ந்து உரிய நேரத் தில் நடைமுறைப்படுத்தாதது ஏன் என்று புரியவில்லை. இதன் பிறகு கையேடு வழங்கினாலும் பலன் குறைவாகத்தான் இருக்கும்' என்கின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக