உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 08, 2010

சைவ சமய கோட்பாட்டின் மூலம் தீவிரவாதத்தை முறியடிக்க முடியும் : செங்கோல் ஆதீனம் பேச்சு

சிதம்பரம் : 

                "சைவ சமய கோட்பாட் டின் மூலமாக தீவிரவாதத்தை முறியடிக்க முடியும்' என, செங்கோல் ஆதீனம் கல்யாணசுந்தர சத்தியஞான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பேசினார்.
 
                சிதம்பரத்தில் நடந்த உலக சைவ மாநாட்டின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: பிறப்புகளில் 84 வகை உள்ளது. அதில் மேன்மையான பிறப்பு, மனித பிறப்பு. மனிதனை தவிர மற்ற பிறவிகள் அனைத்தும் கெட்ட நோக்கங்கள் இல்லாமல் செயல்படுகின்றன. எனவே, மனிதனை நெறிப்படுத்த இங்கு நடத்தப்படும் உலக சைவ மாநாடு பயனுள்ளதாக அமையும். உலகில் உள்ள ஜீவன்கள் அத்தனைக்கும் சமயம் கிடையாது. மனிதனுக்கு மட்டும் தான் சமயம் உண்டு. மனிதனை நெறிபடுத்தும் ஒரே சமயம் சைவ சமயம் மட்டுமே.
 
               மனிதனை தவிர பிற ஜீவன்கள் விதிக்கப்பட்ட முறைப்படி வாழ்கின்றன. அதனால்தான் மனிதனை அறநெறிப்படுத்த வேண்டியுள்ளது. சைவ, சித்தாந்தத் தால் மட்டுமே அது முடியும். இந்து மதத்தில் தான் அதிக மதமாற்றம் நடக்கிறது.  இந்து சமயங்கள் பற்றி மக்களிடம் பிரசாரம் இல்லாததே இதற்கு காரணம். மத மாற்றத்திற்கு சூழ்நிலையும் ஒரு காரணமாக அமைகிறது.
 
             அந்த சூழ்நிலையை கண்டறிந்து முறைப்படுத் துவதன் மூலம் மதமாற் றத்தை தடுக்க முடியும். ஆதீனங்கள், மடாதிபதிகள் மூலமாக இந்த பணியை செய்ய முடியும். தீவிரவாதம், பயங்கரவாதம் அதிகமாக உள்ளது. பிற மதங் கள் கூறும் கோட்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படாததால் கட்டுப்படுத்தப் படுவதில்லை. இந்து சமயத் தின் சைவ சமய கோட் பாடு மூலம் தீவிரவாதத்தை கண்டிப்பாக முறியடிக்க முடியும். இவ்வாறு தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பேசினார்.
 
              சிரவை ஆதீனம் குமரகுருபர அடிகளார் பேசியதாவது: சைவத்தின் பெருமைகளையும், பண்பாட்டையும் மக்கள் பின்பற்றவும், பாதுகாக்கவும் திருமுறைகளை பாதுகாக்க வேண்டிய பணி நமக்கு உள்ளது. யோகானந்தர் இந்த பணியை செய்து வருகிறார். திருமடங்களின் பங்கும் அதிகம்.  சமயத்தின் வழிபாட்டு நெறிமுறைகள் அழிந்து கொண்டிருக்கிறது.
 
               இளைஞர்கள் தடம் மாறியும், தடுமாறியும் வருகின்றனர். அவர்களுக்கு சைவ சமயத்தின் தத்துவங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். சமய நெறிமுறைகள், சமய ஆகமங்கள், திருமுறைகளை இளைஞர்கள் கற்றுக்கொள்ள வழிவகுத்துக் கொடுக்க வேண்டும். வருங்கால சந்ததியருக்கு இந்த பணி பயனுள்ளதாக அமையும்.
 
                  காலம், நேரம், விஞ்ஞானம் என அனைத்தையும் நாம் வென்றுவிட்டோம். மனிதர்களின் வேறுபாடுகளை வெல்ல முடியவில்லை. மனித வாழ்க் கைக்கு உளவியலும், ஆன்மிகமும் மிக அவசியம். சம அளவில் இரண் டும் வேண்டும். ஒன்று சரியில்லை என்றாலும் ரயில் பாதை போன்று தடம் மாறிவிடும். இவ்வாறு குமரகுருபர அடிகளார் பேசினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior