திட்டக்குடி :
மங்களூர் ஒன்றியத்தில் விடுப்பில் இருந்த ஆசிரியர்களுக்கு எஸ்.எஸ்.ஏ., சார்பில் ஒருநாள் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
இடைச்செருவாய் வட்டார வளமையத்தில் நடந்த முகாமை வட்டார வளமைய மேற்பார்வையாளர் முருகேசன் துவக்கி வைத்தார். ஆசிரிய பயிற்றுனர்கள் மணிகண்டன், இளஞ்செழியன், சிவகுரு, மஞ்சு, பன்னீர்செல்வம், சரஸ்வதி பயிற்சி அளித்தனர். இதில் விடுப்பில் இருந்த ஆசிரியர்களுக்கு கற்றல், கற்பித்தல் பயிற்சி அளிக்கப்பட்டது. மங்களூர் ஒன்றியத்தை சேர்ந்த 160 ஆசிரியர்கள் பயிற்சி பெற்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக