திட்டக்குடி :
திட்டக்குடி அடுத்த தொளார் கிராமத்தில் காங்., கொடியேற்று விழா நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் இளவழகன், நகர தலைவர் கனகசபை, மாவட்ட செயலா ளர் செல் வமணி, துணைத் தலைவர் பெரியசாமி, வட்டார தலைவர் கந்தசாமி முன் னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் வரவேற்றார்.
காங்., கொடியை ஏற்றி வைத்த எம்.பி., அழகிரி பேசியதாவது:நாட்டின் நலன் கருதி காங்., ஆட்சி செய்து வருகிறது. ஏழை மக்களுக்கு ஒரு ரூபாய்க்கு அரிசி உட்பட கோதுமை, எண்ணெய் என மலிவான விலையில் அரசு வழங்கி வருகிறது. எதிர்கட்சிகள் ஆடு, கோழி விலையேற்றம் பெற்றதாக கூறுகின்றனர். மனிதனின் வாழ்வாதாரத்திற்கு அரிசி விலை குறைவாக வழங்குகிறோம். 120 கோடி மக்கள் வசித்து வரும் இந்தியாவில் விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம், அணைகள் மூலம் தண் ணீர், இலவச மின்சாரம், அரசு கஜானாவில் 90 சதவீதம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம், பயணப் படி, ஓய்வூதியம், தொழில் முனைவோர்க்கு வங்கியில் கடன், சரக்குகள் விரைந்து செல்ல தேசிய நெடுஞ்சாலைகள், அகல ரயில் பாதைகள் என ஒவ் வொரு தரப்பினருக்கும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பலவித சலுகைகள் வழங்கி வருகிறது.
தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தினால் மற்ற நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்துள்ளோம். குடும்பத்தால் கைவிடப் பட்ட மூதாட்டிகள் வரை அன்றாட வாழ்க் கையை சுலபமாக நடத் திட நூறு ரூபாய் சம்பளம் வழங்குவதால் சமுதாய புரட்சி ஏற்பட்டுள்ளது. ஒருபுறம் ஐ.டி., பணியில் மாதம் ஒரு லட்சம் சம்பளமாக வழங்கும் போது, ஏழை மக்களுக்கு தினக்கூலியாக நூறு ரூபாய் வழங்குவதில் என்ன தவறு. முதுகெலும்பான விவசாயத்தை ஊக்குவிக்க விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மாற்றிட முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
தொடர்ந்து இறையூரில் காங்., கொடியை ஏற்றினார். ஓ.கீரனூரில் பயணிகள் நிழற்குடையை திறந்த வைத்தார். இதில் ஊராட்சி தலைவர் உமையாள்பதிஜோதி, மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன், இளைஞர் காங்., சவுந்தர்ராஜன், பாலமுருகன், முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக