பண்ருட்டி :
லாரியில் மண்ணெண் ணெய் ஊற்றும்போது உணவு கடத்தல் தடுப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். பண்ருட்டி பகுதியில் மாவட்ட வழங்கல் அலுவலர் தேவராஜ் தலைமையில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக் டர் புருஷோத்தம்மன், பறக்கும்படை தாசில்தார் கண்ணன், வட்ட வழங்கல் அலுவலர் சுப்ரமணியன் ஆகியோர் கொண்ட குழுவினர் பொதுவினியோக திட்ட மண்ணெண்ணெய் விற்பனை தடுப்பு குறித்து திடீர் சோதனை நடத்தினர். அப்போது பண்ருட்டி கும்பகோணம் சாலை இந்தியன் வங்கி அருகில் டி.என்.28.1875 எண்ணுள்ள லாரிக்கு 100 லிட்டர் மண்ணெண்ணெய் ஊற்றிய போது தனிப்படையினர் விரைந்து சென்று லாரி டிரைவர் வேலு(38)வை கைது செய்தனர். மண் ணெண்ணெய் எடுத்து வந்த டி.வி.எஸ்.50., யை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.
downlaod this page as pdf