பண்ருட்டி :
பண்ருட்டி அடுத்த சிறுவத்தூரில் கால்நடைகளுக்கு மலட்டு தன்மை நீக்கும் சிகிச்சை முகாமினை கலெக்டர் சீத்தாராமன் துவக்கி வைத்தார்.
பண்ருட்டி அடுத்த சிறுவத்தூர் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புதுறை சார்பில் அரசு நீர்வள நிலவளத் திட்டத்தில் கால்நடைகளுக்கு மலட்டுத் தன்மை நீக்க சிகிச்சை முகாம் நேற்று நடந்தது. ஊராட்சி மன்றத் தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். உதவி இயக்குனர் தட்சணாமூர்த்தி வரவேற்றார். கலெக்டர் சீத்தாராமன் முகாமினை துவக்கி வைத்து சிறந்த கால்நடை உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கினார். மண்டல இணை இயக்குனர் இளங்கோவன் திட்ட விளக்கவுரை நிகழ்த்தினார். வளர்ச்சி குறைந்த கால்நடைகளுக்கு கர்ப்பப்பை சிகிச்சை, கன்று போட்ட பசுக்கள், எருமைகள் குறுகிய காலத்தில் சினை பருவத்திற்கு வர சிகிச்சை, கர்ப்பப்பை மற்றும் சூலக நோய்களுக்கு சிறப்பு சிகிச்சை, தடுப்பூசி போடுதல் உள்ளிட்ட சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. கால்நடை டாக்டர்கள் ராமமூர்த்தி, ராஜேஷ், மதிவாணன், வசந்தராணி, தமிழ்செல்வி, அருட்செல்வி ஆகியோர் 500 ஆடு,மாடுகளுக்கு சிகிச்சை அளித்தனர்.
downlaod this page as pdf