பண்ருட்டி :
கடலூர் மாவட்டத்தில் தொடரும் கொள்ளை, வழிப்பறியை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட தொழில் வர்த்த சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கடலூர் மாவட்ட தொழில் வர்த்தக சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் குறிஞ்சிப்பாடியில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். குறிஞ்சிப்பாடி வர்த்தக சங்க தலைவர் மாணிக்கம் முன்னிலை வகித்தார். செயலாளர் தனகோடி வரவேற்றார். கூட்டத்தில் தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரவை மாநில தலைவர் வெள்ளையன், பொதுசெயலாளர் மோகன், மாவட்ட செயலாளர் வீரப் பன், பொருளாளர் ராஜமாரியப்பன், முன் னாள் செயலாளர் நிஜாப்தீன், சேத்தியாதோப்பு பக்கிரிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் வரி இல்லா பட்ஜெட் தாக்கல் செய்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது, மேலவையை மீண்டும் கொண்டு வர தீர்மானம் செய்த தமிழக அரசுக்கு நன்றியும், மேலவையில் வணிக சங்க பிரதிநிதிகள் இடம் பெற செய்ய இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது. கடந்த சில மாதங்களாக கடலூர் மாவட்டத்தில் தொடரும் கொள்ளை, வழிப்பறியை தடுக்க காவல்துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
விழுப்புரம்-மயிலாடுதுறை ரயில் போக்குவரத்தை விரைவில் துவக்க வேண்டும். மின் வெட்டை 3 மணி நேரத் தில் இருந்து ஒரு மணிநேரமாக குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.