உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மே 28, 2010

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேற்று ஒரே நாளில் 5000 பேர் பதிவு

கடலூர் : 

                  கடலூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதற்கா நேற்று பிளஸ் 2 மாணவர்கள் ஏராளமானோர் குவிந்தனர். கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வில் கடலூர் மாவட்டத்தில்  25 ஆயிரத்து 272 பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் கடந்த 14ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் 9 ஆயிரத்து 226 மாணவர்களும், 10 ஆயிரத்து 686 மாணவிகள் என மொத்தம் 19 ஆயிரத்து 912 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் நேற்று பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் மூலம் வழங்கப்பட்டன.

                         மதிப்பெண் சான்றிதழ் பெற்ற பெரும் பான்மையான மாணவர்கள் உயர் கல்வி படிப்பில் சேர்வதற்கு முன் வேலை வாய்ப்பு அலுவலத்தில் பதிவு செய்வது வழக்கம். இதற்காக கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில் மாணவ, மாணவிகள் சிரமமின்றி பதிவு செய்ய வசதியாக இந்தாண்டு கடலூர், சிதம்பரம், நெய்வேலி, விருத்தாசலம் என நான்கு மையங்களில் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்று காலை முதல் நான்கு மையங்களிலும் பதிவு செய்வதற்காக பிளஸ் 2 மாணவ,மாணவிகள் ஏராளமானோர் தங்கள் பெற்றோர்களுடன் பதிவு மையத் தில் குவிந்தனர். போலீஸ் பாதுகாப்புடன் தள்ளுமுள்ளு இல்லாமல் இரவு வரை பதிவு செய்யப் பட்டது. நேற்று கடலூர் மாவட்டத்தில் நான்கு பதிவு மையங்களிலும் 5 ஆயிரம் பேர் பதிவு செய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior