உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மே 28, 2010

என்எல்சி ஊதியமாற்று ஒப்பந்தம்: மீண்டும் இழுபறி


நெய்வேலி:

                  என்எல்சி தொழிலாளர்களின் புதிய ஊதியமாற்று ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறி நிலையிலேயே உள்ளது.  சென்னையில் உள்ள என்எல்சி இல்லத்தில் நிர்வாகத்துக்கும் தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும் இடையே கடந்த மூன்று தினங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எடுக்கப்படாமல் நீடித்து கொண்டே வருகிறது. என்எல்சி தொழிலாளர்களுக்கு 01-01-2007 முதல் வழங்க வேண்டிய புதிய ஊதிய விகிதத்தின் அடிப்படையிலான ஊதியம் இதுவரை வழங்கப்படாததால், என்எல்சி நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் நிர்வாகத்துடன் பலச்சுற்று பேச்சுவார்த்தை நடத்தின.  இப்பேச்சில் பல விஷயங்களில் முரண்பாடான நிலை தொடர்ந்து நீடித்துவந்தது. இந்நிலையில் பேச்சுவார்த்தையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் நிர்வாகம் சென்னையில் உள்ள என்எல்சி இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இப்பேச்சுவார்த்தையில் பொது அலவன்ஸ் 40 சதவீதமாகவும், சுரங்கத் தொழிலாளர்களுக்கு கூடுதலாக 12 சதவீதமும், ஹாட்ஷீட் மற்றும் டிராக்ஷிப்டிங் போன்ற அலவன்சுகள் 100 சதவீத உயர்வு அளிக்க முன்வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் ஊதிய நிர்ணய அலகீட்டுத் தொகைகுறித்து என்எல்சி தலைவர் அன்சாரியுடன் பேசி தீர்வு காண்பது எனவும், பதவி உயர்வு தொடர்பாக குழு அமைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதை தொழிற்சங்க நிர்வாகிகள் ஏற்றுக் கொண்டிப்பதாகவும், அதனால் தொழிற்சங்க நிர்வாகக் குழுக் கூட்டத்தைக் கூட்டி அதன் ஒப்புதலைப் பெற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள் எனவும் கூறப்படுகிறது.

                        அதன்படி புதன்கிழமை சென்னையில் தொழிற்சங்கங்களின் சிறப்பு நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிர்வாகக் குழுவில் சரியான ஒப்புதல் கிடைக்காததால் மீண்டும் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior