கடலூர் :
சென்னை எம்.ஜி.ஆர்., அரசு திரைப்படம் மற்றும் தொலைக் காட்சி பயிற்சி நிறுவனத்தில் 2010-2011ம் ஆண்டிற்கு மாணவ, மாணவிகளிடம் இருந்து விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகிறது. தமிழ்நாடு அரசின் மக்கள் தொடர்பு துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் சென்னை எம்.ஜி. ஆர்., அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் 2010-2011ம் ஆண்டிற்கான முதலாம் ஆண்டு முழு நேர மூன்று ஆண்டுகளுக்கான பட்டயப் படிப்புகளில் சேர்வதற்கு மாணவ, மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதில் இயக்குதல், திரைக்கதை, வசனம் எழுதுதல் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பு பட்டயத்திற்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
திரைப்பட தொழில் நுட்பம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பு பட்டயம் (ஒளிப்பதிவு), திரைப்பட தொழில்நுட்பம் மற்றும் தொலைக் காட்சி தயாரிப்பு பட்டயம் (படம் பதனிடுதல்), திரைப்பட தொழில் நுட்பம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பு பட்டயம் (ஒளிப்பதிவு மற்றும் ஒலிப்பொறியியல்) சேர்வதற்கு மேல்நிலையில் இயற்பியல், வேதியியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல் அல்லது மின்னணுவியல் மற்றும் தொலைத் தொடர்பு பொறியியல் பட்டய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். படத்தொகுப்பு மற்றும் தொலைக் காட்சி தயாரிப்பு பட்டயத்தில் சேர்வதற்கு மேல்நிலை கல்வியில் ஏதேனும் ஒரு கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விபரங்களுக்கு 044-22542212 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும். இத்தகவலை எம்.ஜி. ஆர்., அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன முதல்வர் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக