உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மே 28, 2010

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்


                 தமிழ்நாடு வேளாண்மைப்  பல்கலைக்கழகம் கடந்த 1971ம் ஆண்டு கோவையில் தொடங்கப்பட்டது. 

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள படிப்புகள்: 

               இங்கு 4 ஆண்டு பி.எஸ்சி படிப்பில் வேளாண்மை, மனையியல், வனவியல், தோட்டக்கலை ஆகிய 4 பாடப்பிரிவுகள் உள்ளன.கோவை, மதுரை, கிள்ளிகுளம் (தூத்துக்குடி) மற்றும் நாவலூர் குட்டப்பட்டு (திருச்சி) ஆகிய இடங்களில் வேளாண்மைப் படிப்பு உள்ளது.பெரியகுளத்தில் தோட்டக்கலைப் படிப்பும் , மேட்டுப்பாளையத்தில் வனவியல் படிப்பும் மதுரையில் மனையியல் படிப்பும் கற்றுத்தரப்படுகின்றன.இப்பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துடன் காரைக்கால் (புதுவை) பண்டித ஜவாஹர்லால் நேரு வேளாண்மை மற்றும் ஆய்வு மையத்தில் பி.எஸ்சி., வேளாண்மைப் பாடம் போதிக்கப்படுகிறது. கலவை ஆதிபராசக்தி வேளாண்மைக் கல்லூரியில் சுயநிதி அடிப்படையின் கீழ் பி.எஸ்சி வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறைப் பாடங்கள் போதிக்கப்படுகின்றன.குமுளூரில் (திருச்சி) பி.டெக் வேளாண் பொறியியல் படிப்பு உள்ளது. மாறி வரும் கல்விச் சூழலுக்கேற்ப சுயநிதிப் பிரிவின் கீழ் 3 பி.டெக் பாடங்கள் தொடங்கப்பட்டுள்ளன. கோவையில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் உணவுப் பதப்படுத்துதல் தொழில்நுட்பம், வேளாண்மை உயிர் தொழில்நுட்பம், தோட்டக்கலைத்துறை ஆகிய பிடெக் பாடப்பிரிவுகள் உள்ளன.ஏப்ரலில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் தொழிற்கல்வி நுழைவுத் தேர்வுகள் மூலம் இங்குள்ள பிஎஸ்சி, பிடெக் பாடங்களில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.வேளாண் பொருளாதாரம், வேளாண் விரிவாக்கம், வேளாண் நுண்ணுயிரியல், உழவியல், வேளாண் பூச்சியியல், பயிர் வினையியல், பயிர் பெருக்கம் மற்றும் மரபியல், பயிர் நூற்புழுவியல், பயிர் நோயியல், விதை அறிவியல் மற்றும் தொழிநுட்பம், மண் வேதியியல், கரும்பு உற்பத்தி, தோட்டக்கலை, பட்டு வளர்ப்பு, உயிர் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் அறிவியல், சத்துணவு, வனவியல் ஆகியவற்றில் எம்.எஸ்சி பாடங்கள் உள்ளன.எம்.இ பாடத்தில் பண்ணை இயந்திரவியல், உயிர் சக்தியியல், வேளாண் பொருள்களைப் பதனிடுதல், மண் மற்றும் நீர் வளப் பாதுகாப்பு ஆகிய பிரிவுகள் உள்ளன. எம்.பி.ஏ பாடமும் உண்டு. 

தொடர்புக்கு:  

பதிவாளர்,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர் - 641003. 

தொலைபேசி: 

0422-6611210, 6611200 

இணையதள முகவரி: 

http://www.tnau.ac.in/

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior