விருத்தாசலம் :
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூரில் பிரசித்தி பெற்ற கொளஞ்சியப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேகம் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்தது. இதில் கலெக்டர் சீத்தாராமன், டி.ஐ.ஜி., மாசானமுத்து உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். நேற்று காலை ஐகோர்ட் நீதிபதி நாகப்பன் கொளஞ்சியப்பர் கோவிலுக்கு வருகை தந்தார். அவரை கோவில் செயல் அலுவலர் நாகராஜன், டி.எஸ்.பி., ராஜசேகரன், வக்கீல் மெய்கண்டநாதன், விஜயகுமார் வரவேற்றனர். கொளஞ்சியப்பருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் நீதிபதி நாகப்பன், சுவாமியை வழிபட்டார். கோவிலின் சிறப்புகளை செயல் அலுவலர் எடுத்து கூறினார். பின்னர் நீதிபதி நாகப்பன் பிராது கட்ட விருப்பம் தெரிவித்ததையடுத்து வெள்ளை தாளில் தனது குறைகளை எழுதி முனியப்பர் சுவாமியின் முன்புறம் உள்ள வேலில் கட்டினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக