தொழிலாளர் நலத்துறை மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களின் செயல்பாடுகளை, மின் ஆளுமை திட்டத்தின் கீழ் செயல்படும் வகையில், புதிய இணையதள துவக்க விழா சென்னை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நடந்தது. www.labour.tn.gov.in என்ற புதிய இணைய தளத்தை அமைச்சர் அன்பரசன் துவக்கி வைத்தார். தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான, "தொழிலாளர் நல்லுறவு மலர்' என்ற காலாண்டு செய்தி மலரையும் அன்பரசன் வெளியிட்டார். பின், தொழிலாளர் நல ஆணையரகத்தின் நான்காவது தளத்தில், புதிதாக சீரமைக்கப்பட்ட பார்வையாளர் அறையையும் திறந்து வைத்தார். புதிய இணையதளம் மூலம் தொழிலாளர் நலத்துறை மற்றும் பல்வேறு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் குறித்த விவரங்களை, பொதுமக்கள் எளிதாக தெரிந்து கொள்ள முடியும். நிகழ்ச்சியில், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை முதன்மைச் செயலர் பிரபாகர்ராவ் மற்றும் தொழிலாளர் நல ஆணையர் ஹன்ஸ்ராஜ் வர்மா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக