சிறுபாக்கம்:
மங்களூர் ஒன்றிய விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் ஒன்றிய வளாகத்தில் நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். தோட்டக்கலை உதவி இயக்குனர் முருகன், வேளாண் பொறியியல் துறை பொறியாளர் வீரசுப்பிரமணியம் முன்னிலை வகித்தனர். வேளாண் அலுவலர் டென்சிங் வரவேற்றார். கூட்டத்தில் மங்களூர் ஒன்றிய கரும்பு விவசாயிகளுக்கு இறையூர் அம்பிகா மற்றும் சித்தூர் ஆரூரான் சர்க்கரை ஆலைகளிலிருந்து நேரடியாக உரங்கள் வழங்குவதை மாற்றி, சிறுபாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்க வேண்டும். ரசாயன உரங்களை போதிய அளவிற்கு இருப்பு வைக்க வேண்டும். சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு முழு மானிய விலையில் பி.வி.சி., பைப்புகள், வேளாண் கருவிகள் வழங்க வேண்டும். ஆடிப்பட்டத்திற்கு தேவையான 20:20:0 தேவையான விதைகள் இருப்பு வைக்க வேண்டும் என விவசாயிகள் பேசினர்.கூட்டத்தில் கால்நடை உதவி மருத்துவ அலுவலர் சுப்ரமணியன், வேளாண்மை விற்பனைக்குழு சிவக்குமார், விவசாயிகள் மணிகண்டன், இளங்கோவன், தங்கராசு, ராமு, பாலசுப்பிரமணியன், காமராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக