பண்ருட்டி:
கடலூர் மாவட்டத்தில் வெயில் தாக்கம் அதிகமாக உள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கடலூர் மாவட்ட தொழில் வர்த்தக சங்க தலைவர் சண்முகம் தமிழக முதல்வர் மற்றும் பள்ளிகல்வித்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் தற்போது கோடை வெயில் தாக்கம் குறையாமல் அதிகமாக உள்ளது. கடலூர் மாவட்டத்திலும் அதிகபட்சமாக 108 டிகிரி அளவில் பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளில் சிமென்ட் ஓடுகள் நிறைந்த வகுப்பறைகள் தான் அதிகமாக உள்ளது. இந்த பள்ளிகளில் அமர்ந்து படிப்பதால் மாணவர்ளின் உடல் நிலை பாதித்து வருகிறது. மாவட்டத்தையொட்டியுள்ள புதுச்சேரியில் கோடை வெயில் தாக்கம் காரணமாக பள்ளிக்கு கூடுதலாக 15 நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதுபோல் வெயில் தாக்கம் அதிகம் உள்ள கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு வரும் 20ம் தேதிவரை விடுமுறை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக