கடலூர்:
கடலூர் மாவட்ட "கான்கிரீட்' வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கணக்கெடுப்பு பணிக்கு ஆவணங்கள் அளிக்க வரும் 30ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
கடலூர் மாவட்டத்தில் "கான்கிரீட்' வீடு கட்டும் திட்டத் தில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 914 கூரை வீடுகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. மேலும் 668 கிராம ஊராட் சிகளில் ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 263 கூரை வீடுகள் மேல் ஆய்வு செய் யப்பட்டுள்ளது. இப்பணிகள் சரி பார்க்கப்பட்டு, இணைய தளத்தில் பதிவு செய்யும் பணி நடக்கிறது.கணக்கெடுப்பின் போது தற்காலிகமாக வெளியூர் சென்றிருத்தல், அல்லது கால நிலைகளுக்கு ஏற்ப வெளியூருக்கு இடம் பெயர்ந்தவர்கள் கணக்கெடுப்பு படிவத்தில் இடம் பெற செய்வதற்குரிய ஆவணங்களை சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி தலைவர் அல்லது வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வரும் 30ம் தேதி வரை நேரிடையாக சந்தித்து விண்ணப்பிக்கலாம். எனவே கணக்கெடுப்பின் போது ஆவணங்கள் அளிக்காதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக