உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 07, 2010

வியாபாரிகளுக்கு ஆதரவாக அதிகாரிகள்பண்ருட்டியில் விவசாயிகள் கடும் பாதிப்பு

பண்ருட்டி: 

                       பண்ருட்டி மார்க்கெட் கமிட்டியில் வியாபாரிகளுக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுவதால் விவசாயிகள் கடும் பாதிப்படைந்துள்ளனர். பண்ருட்டி மார்க்கெட் கமிட்டியில் விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டையை இறக்குவதற்கு மூட்டை ஒன்றுக்கு 3 ரூபாயும், எடைபோட 3ம், எடை மேஸ்திரிக்கு 3ம், பதிவு செய்பவருக்கு ஒரு ரூபாய் என ஒரு மூட்டைக்கு கமிட்டியில் மட்டும் 10 ரூபாய் செலவாகிறது.கமிட்டியில் குறைந்த விலையாக ஒரு மூட்டை 500 ரூபாய்க்கு நிர்ணயம் செய்தனர்.

                ஏற்கனவே விவசாயம் செய்வதற்கு கூலி ஆட்கள் பற்றாக்குறை, உற்பத்தி குறைவு உள்ளிட்ட பல்வேறு பிரச்னையில் சிக்கித் தவிக்கும் விவசாயிகள் அடிமாட்டு விலைக்கு வியாபாரிகள் விலை நிர்ணயம் செய்ததால் நெல் மூட்டைகளை விற்கவில்லை.

இதுபற்றி விவசாயிகள் கூறுகையில் "

                  கமிட்டியில் வேர்க்கடலை விலை நிர்ணயம் செய்தவதில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக கமிட்டிக்கு விவசாயிகள் வேர்க்கடலை கொண்டு வருவதில்லை. தற்போது நெல்லுக்கும் வியாபாரிகளுக்கு ஆதரவாக விலை நிர்ணயம் செய்யாததால் கமிட்டிக்கு நெல் வரத்தும் குறையும்.மேலும், கமிட்டியில் விவசாயிகளுக்கு சாக்கு வழங்குவதில்லை, மூட்டைகள் இறக்கி, ஏற்றும் கூலிகளில் முறைகேடு நடக்கிறது. நெல் மூட்டைகளை கொண்டு வந்தால் பாதுகாப்பு இல்லை. விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை அன்றே விற்பனைக்கு எடுப்பது இல்லை. இதற்கு மார்க்கெட் கமிட்டி அதிகாரிகள் உரிய பதில்அளிப்பதில்லை. வியாபாரிகளுக்கு ஆதரவாக விலை நிர்ணயம் செய்வதை தடுக்க வேளாண் விற்பனைக் குழு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior