பி.எட்., படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வெள்ளிக்கிழமை (ஜூலை 30) முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை விநியோகிக்கப்படுகின்றன.
உயர் ஆசிரியர் கல்வியியல் நிறுவனங்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள் ஆகியவற்றில் விண்ணப்பங்கள் கிடைக்கும். விண்ணப்பத்தைப் பெற நேரில் வர வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான பி.எட்., விண்ணப்பத்தின் விலை ரூ.175. மற்ற பிரிவினருக்கு ரூ.300.
விண்ணப்பக் கட்டணத்தை பணமாகவும் செலுத்தலாம். அல்லது செயலர், தமிழ்நாடு பி.எட்., மாணவர் சேர்க்கை, சென்னை -5 என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் வங்கி வரையோலையாகவும் செலுத்தலாம்.
விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம்:
குமாரபாளையம், ஒரத்தநாடு, புதுக்கோட்டை, கோவை, வேலூர் காந்திநகர் ஆகிய இடங்களில் உள்ள அரசு ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். விண்ணப்பங்கள் கிடைக்கும்.
இது தவிர,
- உயர் ஆசிரியர் கல்வியியல் நிறுவனம் (சென்னை, சைதாப்பேட்டை),
- வெலிங்டன் உயர் ஆசிரியர் கல்வியியல் நிறுவனம் (சென்னை, திருவல்லிக்கேணி)
- என்.கே.டி. தேசிய பெண்கள் ஆசிரியர் கல்வியியல் கல்லூரி (சென்னை, திருவல்லிக்கேணி),
- மெஸ்டன் ஆசிரியர் கல்வியியல் கல்லூரி (சென்னை, ராயப்பேட்டை),
- ஸ்டெல்லா மேடிடோனா பெண்கள் ஆசிரியர் கல்வியியல் கல்லூரி (சென்னை, அசோக்நகர்),
- கிறிஸ்டோபர் பெண்கள் ஆசிரியர் கல்வியியல் கல்லூரி (சென்னை, வேப்பேரி)
- அண்ணாமலை ஆசிரியர் கல்வியியல் கல்லூரி (சென்னை, தூத்துக்குடி),
- வ.உ.சி. ஆசிரியர் கல்வியியல் கல்லூரி (தூத்துக்குடி)
- தியாகராஜர் ஆசிரியர் கல்வியியல் கல்லூரி (மதுரை),
- புனித ஜஸ்டின் பெண்கள் ஆசிரியர் கல்வியியல் கல்லூரி (மதுரை),
- புனித சேவியர் ஆசிரியர் கல்வியியல் கல்லூரி (பாளையங்கோட்டை),
- புனித இக்னேஷியஸ் பெண்கள் ஆசிரியர் கல்வியியல் கல்லூரி (பாளையங்கோட்டை),
- ஸ்ரீ ஆர்.கே.எம்.வி. ஆசிரியர் கல்வியியல் கல்லூரி (கோவை),
- ஸ்ரீ சாரதா ஆசிரியர் கல்வியியல் கல்லூரி (சேலம்)
- லட்சுமி ஆசிரியர் கல்வியியல் கல்லூரி (காந்திகிராமம்),
- என்.வி.கே.எஸ்.டி. ஆசிரியர் கல்வியியல் கல்லூரி (திருவட்டாறு)
- ஆகிய கல்லூரிகளிலும் கிடைக்கும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக