உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 31, 2010

ம.தி.மு.க.வின் அங்கீகாரம் ரத்து



          
             ம.தி.மு.க.வின் மாநில கட்சி அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.  
 
             ஒரு அரசியல் கட்சி தேர்தல் ஆணையத்தால் மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட வேண்டுமானால், சட்டப்பேரவையில் உள்ள ஒவ்வொரு 30 உறுப்பினர்களுக்கும் ஒரு உறுப்பினர் என்ற வீதத்தில் அந்தக் கட்சியின் பலம் இருக்க வேண்டும். இல்லையெனில், மாநிலத்திலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு 25 உறுப்பினர்களிலும், ஒரு உறுப்பினர் சம்பந்தப்பட்ட கட்சியின் உறுப்பினராக இருக்க வேண்டும். 
 
               இந்த விதிகளின்படி, தமிழ்நாட்டில் ஒரு அரசியல் கட்சி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டுமானால், அந்தக் கட்சிக்கு சட்டப்பேரவையில் குறைந்தது 8 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். இல்லையெனில், மக்களவையில் 2 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், கடைசியாக நடைபெற்ற பொதுத்தேர்தலில் பதிவான செல்லத்தக்க மொத்த வாக்குகளில், அந்தக் கட்சி குறைந்தது 6 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும்.  ம.தி.மு.க.வைப் பொருத்தவரை இந்த மூன்று நிபந்தனைகளையும் நிறைவேற்ற முடியாததால், அந்தக் கட்சியின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அண்மையில் தில்லி சென்ற அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, தலைமை தேர்தல் ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். 
 
            இந்நிலையில், ம.தி.மு.க.வின் மாநிலக் கட்சி அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதாக தலைமை தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.  அதேபோல், அகில இந்திய வானொலி, தூர்தர்ஷன் மூலம் இனி ம.தி.மு.க.வால் தேர்தல் பிரசாரம் செய்ய முடியாது.  அடுத்த பொதுத்தேர்தலில் பெறும் வாக்குகளைப் பொருத்து, ம.தி.மு.க.வுக்கு மீண்டும் அங்கீகாரம் வழங்குவது பற்றி தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்.  இதேபோல் புதுச்சேரியில் பா.ம.க. அங்கீகாரத்தை இழந்துள்ளது. அருணாசல பிரதேசத்தில் அருணாசல காங்கிரஸ், உத்தராஞ்சல், மத்தியப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி, பிகார், ஜார்க்கண்டில் ஐக்கிய ஜனதா தளக் கட்சி ஆகியவற்றின் மாநில கட்சி அங்கீகாரத்தையும் தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.
 
                     னினும், புதுச்சேரியில் அங்கீகாரத்தை இழந்துள்ள பா.ம.க., தமிழகத்தில் தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக செயல்படும்.  குறைந்தது ஐந்து மாநிலங்களிலாவது மாநிலக் கட்சியாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை நிறைவேற்றாததன் காரணமாக, லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் தேசிய கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது. 
 
"பம்பரம் நீடிக்கும்' 
 
               அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் சின்னத்தை தொடர்ந்து பயன்படுத்தலாம் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் ம.தி.மு.க.வின் பம்பரம் சின்னம் நீடிக்கும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior