உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 31, 2010

வீராணம் நீருக்காக காத்திருக்கும் விவசாயிகள்

சிதம்பரம்:
 
           கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியின் நீர் மட்டம் குறைந்தது. சம்பா சாகுபடிக்கான உழவுப்பணிகளை மேற்கொள்ள மேட்டூரிலிருந்து திறக்கப்படும் நீருக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
 
           வீராணம் ஏரியின் நீர்மட்டம் மொத்தம் 47.5 அடியாகும். தற்போது போதிய மழை இல்லாததாலும், நீர்வரத்து இல்லாததாலும் வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைந்து வெள்ளிக்கிழமை நிலவரப்படி 42 அடியாக உள்ளது.  ஏரியின் நீர்மட்டம் குறைந்துள்ளதால் ஏரியிலிருந்து சென்னை குடிநீருக்காக விநாடிக்கு 32 கனஅடி நீர் அனுப்பப்படுகிறது. ஏற்கெனவே விநாடிக்கு 76 கனஅடி நீர் அனுப்பப்பட்டு வந்தது. சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகாக்களில் 1 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்ய மேட்டூரிலிருந்து திறந்துவிடப்படும் நீருக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர். 
 
               மேட்டூரிலிருந்து ஜூலை 28-ம் தேதி நீர் திறந்து விடப்பட்டது. அந்த நீர் கல்லணைக்கு வந்தபின்னர் அங்கிருந்து ஆகஸ்ட் 1-ம் தேதி நீர் திறந்துவிடப்படுவதால் கீழணைக்கு ஆகஸ்ட் 4-ம் தேதி நீர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் ஆகஸ்ட் 5 அல்லது 6-ம் தேதி கீழணையிலிருந்து வீராணம் ஏரிக்கும், வேளாண் பாசனத்துக்கும் நீர் திறந்துவிடப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior