தமிழகம் உள்பட நாடு முழுவதும் உள்ள சம்பளதாரர்கள் 2009-10-ம் நிதியாண்டுக்கு தங்களது வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய சனிக்கிழமை (ஜூலை 31) கடைசி நாளாகும்.
சென்னை நுங்கம்பாக்கம் தலைமை அலுவலகத்தில் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் கவுண்ட்டர்கள் ஜூலை 28-ம் தேதி முதல் செயல்பட்டு வருகின்றன. தாம்பரம், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சம்பளதாரர்களும் சிறப்புக் கவுண்ட்டர்களில் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்து வருகின்றனர். சென்னையில் கடந்த 3 தினங்களில் மட்டும் மொத்தம் 93,000 சம்பளதாரர்கள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்துள்ளனர்.
சிறப்புக் கவுண்ட்டர்கள் மூலம் மூன்றாவது நாளான வெள்ளிக்கிழமை (ஜூலை 30) மட்டும் 30,000 சம்பளதரார்கள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்தனர். சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரி தலைமை அலுவலக சிறப்புக் கவுண்ட்டர்களில் கடைசி நாளான சனிக்கிழமை (ஜூலை 31), காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை சம்பளதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட வருமான வரிக் கணக்குப் படிவத்தை அளிக்கலாம். கூட்டம் அதிகமாக இருக்கும் நிலையில், மாலை 6 மணி வரை வருமான வரிப் படிவங்களைப் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக