நெல்லிக்குப்பம்:
கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரி மாணவர்கள் நிர்வாகத்தை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த குமராபுரம் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்கள் நேற்று கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். கடந்த 2007ம் ஆண்டு வரை கல்லூரியில் படித்த பொறியியல் படிப்பு மாணவர்களுக்கு "இ லேர்னிங்' கட்டணம் கிடையாது. 2008ம் ஆண்டு முதல் சேரும் மாணவர்களுக்கு "இ லேர்னிங்' கட்டணம் வசூலிக்க வேண்டுமென அரசு அறிவித்துள்ளது. ஆனால் இக்கல்லூரியில் 2007ம் ஆண்டு சேர்ந்தவர்களிடமும் ஆண்டுக்கு 2,000 வீதம் நான்கு ஆண்டுகளுக்கு 8,000 ரூபாய் வசூல் செய்துள்ளனர். மாணவர் கள் பல்கலைக்கழகத்தில் விசாரணை செய்ததில் 2007ம் ஆண்டு மாணவர்களுக்கு "இ லேர்னிங்' கட்டணம் கிடையாது என கூறியுள்ளனர்.
மாணவர்கள் கூறுகையில்,
"குடிநீர், கழிவறை அடிப்படை வசதிக்காக ஒவ்வொரு மாணவரும் வாரம் 10 ரூபாய் கட்டுகிறோம். ஆனால் அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை. பள்ளி மாணவர் களைப் போல் நடத்துகின் றனர். சட்டத்துக்கு புறம் பாக வசூல் செய்த 8,000 ரூபாயை திரும்பத் தர வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடத்துகிறோம். மூன்று நாட்களில் பேசி தீர்வு காண்பதாக கல்லூரி நிர்வாகத்தினர் கூறினர். ஆனால் பணத்தை திருப்பித் தரும் வரை போராட்டம் தொடரும்' என மாணவர்கள் கூறினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக