பண்ருட்டி:
33 வார்டுகளில் அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்வதற்காக ரூ.5 கோடி திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு அதற்கான நிதியுதவி உலக வங்கியிடம் இருந்து கிடைத்தவுடன் அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படும் என நகர்மன்றத் தலைவர் எம்.பச்சையப்பன் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் நகர்மன்றத் தலைவர் எம்.பச்சையப்பன் கூறியது:
செங்கல்பட்டு நகராட்சி நிர்வாக இயக்குநர் அலுவலகத்துக்கு (கடலூர் மாவட்ட நகராட்சிகளின் தலைமையிடம்) உலக வங்கி மூலம் ஒவ்வொரு நகராட்சியிலும் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்வதற்கான நிதியுதவி பெற,திட்ட பட்டியல் மதிப்பீடு அறிக்கை கோரியது.
அதன்படி பண்ருட்டி நகராட்சிக்கு ரூ. 5 கோடியில் நிதி உதவி கேட்டு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். பண்ருட்டி நகராட்சியின் நகர்மன்ற அவசரக் கூட்டம் அதன் தலைவர் எம்.பச்சையப்பன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
பழனி (திமுக):
நகரப் பகுதியில் மரம் நடப்படுவதே இல்லை. கெடில நதியிலும் மரங்கள் இல்லை. உடனடியாக மரங்களை நட நடவடிக்கை எடுக்க வேண்டும். பல இடத்தில் தெரு விளக்குகள் எரியவில்லை. குப்பை வண்டிகள் ஓட்டை உடைச்சலாக உள்ளது. புதிய வாகனங்கள் வாங்க வேண்டும்.
பரமேஸ்வரி:
காந்தி நகரில் உள்ள சுகாதார நிலையத்தை சரி செய்யவில்லை என்றால் சாலை மறியல் செய்ய போவதாக பொது மக்கள் கூறுகின்றனர்.
எம்.பச்சையப்பன் (தலைவர்):
துப்புரவுப் பணியாளர்கள் 109 பேர் உள்ளனர், இதில் 20 பேர் விடுமுறை எடுத்துக் கொள்கின்றனர். ஆட்கள் பற்றாக்குறையால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. விரைவில் சரி செய்து தருகிறேன்.
சரஸ்வதி (அதிமுக):
திருவதிகை தெற்கு பெருமாள் கோயில் தெரு, ராசாப்பாளையம் மாரியம்மன் கோயில் தெருவில் சாலை சரியில்லாததால் பக்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தார்ச்சாலை அமைத்து தர வேண்டும். தண்ணீர் வரவில்லை போர் போட்டு தர வேண்டும்.
துரைராமு (திமுக):
பண்ருட்டி நகரம் விரிவடைந்து வருகிறது. பணியாளர் இல்லை என கூறுகிறீர்கள், பணியாளர்களை நியமிக்க வேண்டும். தெருவெல்லாம் சாக்கடை நீர், கொசு தொல்லை அதிகம் உள்ளது. மருந்து அடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தெரு நாய் தொல்லை அதிகம் உள்ளது.
முருகன் (அதிமுக):
யாதவர் தெருவில் தண்ணீர் வரவில்லை. நகராட்சிப் பள்ளியில் பராமரிப்புப் பணி நடைபெறவில்லை.
எம்.பச்சையப்பன் (தலைவர்):
ஒப்பந்ததாரர்கள் பணி செய்யவில்லை. இது போல் பணிகளை பட்டியலிட்டு டெண்டரை நீக்க உத்தரவிட்டுள்ளேன் என கூறியவர் ஒரு வாரத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் பட்டியலை தயாரித்து வழங்குமாறு உறுப்பினர்களிடம் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக