கடந்த ஞாயிற்றுக்கிழமை (18-07-2010) சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு சென்றிருந்தேன். அந்த இரவு பொழுதிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. முன்பெல்லாம் பார்வையாளர்கள், தகவல் அறிவிக்கும் பலகை அருகே வரை செல்லலாம், அனால் இப்பொது வெளியிலே தடுப்பு வைத்து பயணிகள் மட்டும் உள்ளே செல்ல மாற்றி அமைத்து இருக்கிறார்கள்.
அங்கே வெளியில் வரும் வழியில் வைக்கபட்டிருக்கும் வழிகாட்டி பலகையில் (TOILET) என்ற ஆங்கில சொல்லிற்கு இணையாக தமிழில் ஒப்பனை என்று எழுதப்பட்டுள்ளது. TOILET என்ற வார்த்தைக்கு சரியான தமிழ் சொல்லா என்பதில் எனக்கோர் சந்தேகம், யாராவது விளக்குவீர்களா?கடந்த முறை சென்றபோதே இதை பற்றி எழுதலாம் என்றும் இருந்தேன். ஆனால.................
0 கருத்துகள்:
கருத்துரையிடுக