உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 09, 2010

கொலை முயற்சி வழக்கில் கடலூர் கோர்ட்டில் 11 பேருக்கு 3 ஆண்டு சிறை

கடலூர் : 

             கொலை முயற்சி வழக்கில் கடலூர் கோர்ட்டில் 11 பேருக்கு தலா மூன்று ஆண்டு சிறை தண்டனை வழங்கப் பட்டது.

                நெல்லிக்குப்பம் அடுத்த பட்டீஸ்வரம் பாலமுருகன் கோவிலில் கடந்த 2006ம் ஆண்டு திருவிழா நடந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த துரைராஜ் ஆதரவாளர்களுக்கும், சண்முகம் ஆதரவாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் 2006ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி துரைராஜ் உறவினர்கள் அய்யனார் கோவிலில் பொங்கல் வைப்பதற்காக சென்றனர். அவர்களை சண்முகம் ஆதரவாளர்கள் வழிமறித்து தாக்கி, கொலை செய்ய முயன்றனர். அதில் துரைராஜ், அவரது தந்தை ராஜமாணிக்கம், ராஜவேல், முருகேசன், சரவணன் ஆகியோர் காயமடைந்தனர்.

                இது குறித்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் சண்முகம்(55), செந்தில்குமார்(26), ராதாகிருஷ்ணன்(47), திருநாவுக்கரசு(47), வேல்முருகன்(31), குமாரவேல்(31), கந்தசாமி(35), சுந்தரமூர்த்தி(39), சேகர்(31), ராஜகுமாரன்(39), வீரவேல்(36), மணிகண்டன் (28) ஆகியோரை கைது செய்து, கடலூர் விரைவு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கு விசாரணையின்போது செந்தில் குமார் இறந்ததால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணை நேற்று நடந்தது.

                வழக்கை விசாரித்த நீதிபதி சரோஜினிதேவி கொலை முயற்சியில் ஈடுபட்ட சண்முகம், செந்தில் குமார் உள்ளிட்ட 11 பேருக்கு தலா மூன்று ஆண்டு சிறையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.  அரசு தரப்பில் வக்கீல் திருமூர்த்தி ஆஜரானார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior