உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 09, 2010

கைது செய்த நபரை விடுவிக்கக்கோரி மங்கலம்பேட்டை ஸ்டேஷன் முற்றுகை

விருத்தாசலம் : 

             மங்கலம்பேட்டையில் போலீசார் கைது செய்த நபரை விடுதலை செய்யக் கோரி கிராம மக்கள் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

             விருத்தாசலம் மங்கலம்பேட்டை அடுத்த கோணாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (40). இவர் வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்பும் ஏஜன்ட். இவரிடம் விழுப்புரம் மாவட் டம் திருநாவலூர் பாண்டுரங்கன் (53) அவரது உறவினர்கள் நான்கு பேரை வெளிநாடு அனுப்புவது தொடர்பாக 1 லட்சத்து 40 ஆயிரம் பணமும், நான்கு பாஸ்போட்டுகளையும் கடந்த ஆண்டு ஜனவரி 15ம் தேதி கொடுத்துள்ளனர்.

               பல மாதங்கள் ஆகியும் வெளிநாட் டிற்கு அனுப்பாததால் பாண்டுரங்கன் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். இதில் 30 ஆயிரம் பணத்தையும், நான்கு பாஸ் போட்டுகளையும் கோவிந்தசாமி திருப்பி கொடுத்துள்ளார். மீதி பணம் கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் கடந்த 6ம் தேதி பாண்டுரங்கன், சண்முகம் உள்ளிட்ட சிலர் கோணாங்குப்பம் கிராமத்திற்கு சென்று கோவிந்தசாமியிடம் மீதி பணத்தை கேட்டனர். இதனால் ஏற்பட்ட தகராறில் பாண்டுரங்கன், சண்முகம் காயமடைந்து விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கோவிந்தசாமி, பாண்டுரங்கன் போலீஸ் நிலையத்தில் பரஸ்பரம் புகார் கொடுத்தனர். பாண்டுரங்கன் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் கோவிந் தசாமியை நேற்று மாலை கைது செய்து போலீஸ் நிலையத்தில் வைத்திருந்தனர்.

                இதை அறிந்த கோணாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் போலீஸ் ஸ்டேஷன் முன் கூடினர். அப்போது போலீசார் கோவிந்தசாமியை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக நேற்று மாலை 6.15 மணியளவில் போலீஸ் ஜீப்பில் ஏற்றினர். இதை அறிந்த அக்கிராமத்தினர் ஜீப்பை வழிமறித்து போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு கோவிந்தசாமியை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். போலீசார் சமாதானம் செய்ததை அடுத்து கலைந்து சென்றனர்.போலீஸ் ஸ்டேஷன் முற்றுகையால் மங்கலம்பேட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior