சிதம்பரம் :
அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் கல்லூரி முதல்வர், துணை வேந்தரை சந்தித்து ஆசி பெற்றார்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் கல்லூரி முதல்வராக பதவியேற்ற வசந்தகுமார், வேளாண் விரிவாக்கத்துறை தலைவராக கடந்த 23 ஆண்டுகளாக பணி புரிந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் ராதேவம் கிராமத்தை சேர்ந்தவர். பட்டம் மற்றும் மேற்படிப்பை கோவை வேளாண் பல்கலைக்கழகத்திலும், முனைவர் பட்டத்தை புது டில்லி இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையத்திலும் பெற்றார்.
முதுகலை முனைவர் ஆய்வை இங்கிலாந்தில் உள்ள ரெடிங் பல்கலைக் கழகத்தில் மேற்கொண்டு, தேசிய மற்றும் பன் னாட்டு விருதுகளை பெற்றவர். தேசிய அளவில் 15 பல்கலைக் கழகங்களில் ஆசிரியர் தேர்வுக்குழு மற்றும் கல்விக்குழு உறுப் பினராகவும், கோவை விரிவாக்க கல்வி சங்கத்தின் துணைத் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். ஆசிய, ஐரோப்பிய மற் றும் வட அமெரிக்க நாடுகளுக்கு பல முறை சென்று புதிய கல்வி மற்றும் ஆய்வு முறைகளை தமிழகத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் மாணவர்கள் ஆறுமாதங்கள் கிராமத்தில் தங்கி சிறப்பு பயிற்சி பெறும் திட்டத்தை முதன் முதலில் நடை முறைப்படுத்தினார். 7 புத்தகங்கள் மற்றும் 80 ஆய்வுக்கட்டுரைகளை எழுதியதுடன், 6 தேசிய மற்றும் சர்வதேச கருத்தரங்கை பங்கேற்று நடத்தியுள்ளார். தற்போது வேளாண் கல்லூரி முதல்வராக பொறுப்பேற்று பல் கலைக் கழக துணை வேந்தர் டாக்டர் ராமநாதனை சந்தித்து ஆசி பெற்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக