உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 09, 2010

தண்ணீர் வரி கட்டாத இணைப்புகள் துண்டிப்பு : கடலூர் நகராட்சி அதிரடி நடவடிக்கை

கடலூர் : 

               கடலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் குடிநீர் வரி செலுத்தாத இணைப்புகளை துண்டித்து நிர்வாகம் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

            கடலூர் நகராட்சி பகுதியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் உள்ளன. கடந்த பல ஆண்டுகளாக கடலூர் நகராட்சியில் தண்ணீர் வரியாக ஆண்டுக்கு 492 ரூபாய் மட்டுமே வசூல் செய்யப்பட்டு வருகிறது. இருந்தும் பலர் வரியை முறையாக கட்டாமல் 2 ஆயிரம் ரூபாய் முதல் 6 ஆயிரம் ரூபாய் வரை பாக்கி வைத்துள்ளனர்.

                இதனால் மின்சார வாரியத்திற்கு பணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது உள்ள இணைப்பில் 50 சதவீதம் பேர் மட்டுமே வரி செலுத்தி வருகின்றனர். பாதிபேர் வரி செலுத்தாமல் உள்ளனர். இதனால் கடலூர் நகராட்சி கமிஷனர் குமார் உத்தரவின் பேரில் நீண்ட நாட்களாக தண்ணீர் வரி செலுத்தாமல் உள்ள இணைப்புகளை ஆய்வாளர்கள் துண்டிக்கும் பணியில் ஈடுபட்டனர். கடலூர் புதுப்பாளையம் அப்பாவு பிள்ளை தெருவில் நேற்று ஒரு வீட்டின் இணைப்பை அலுவலர்கள் துண்டிப்பு செய்தனர். இதை நகராட்சி கமிஷனர் குமார் நேரில் சென்று பார்வையிட்டார்.

இது குறித்து கமிஷனர் குமார் கூறுகையில், 

                  "கடலூர் நகராட்சியில் ஒரு கோடி ரூபாய் தண்ணீர் வரி பாக்கியுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக தண்ணீர் வரி உயர்த்தப்படாமல் உள்ள நிலையிலும், வரி பாக்கியுள்ளது. இதனால் நிர்வாக சிரமங்கள் ஏற்படுகிறது. எனவே தொடர்ந்து வரி செலுத்தாமல் உள்ள இணைப்புகளை துண்டிக்கும் நடவடிக்கையில் இறங்கியதால் கூடுதல் வசூலாகி வருகின்றது' என தெரிவித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior