பண்ருட்டி :
பண்ருட்டி அருகே முதியவர் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் கூலிப்படையை சேர்ந்த மேலும் இருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கீழ்கவரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடகிருஷ்ணன்(59). இவர் கடந்த 26ம் தேதி இரவு 9 மணிக்கு கீழ்கவரப்பட்டு பஸ்நிறுத்தம் அருகே நடந்து சென்ற போது காரில் கடத்தப்பட்டார். பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து தேடி வந்தனர். கடந்த 2ம் தேதி மேல்கவரப்பட்டு தி.மு.க., கிளை செயலாளர் ஜெயராமனை கைது செய்தனர்.
அவர் கொடுத்த தகவலின்பேரில் கடத்தப்பட்ட வெங்கடகிருஷ்ணன் அன்று இரவே புதுச்சேரியை சேர்ந்த கூலிபடையினரால் கொலை செய்து நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்றில் வீசியது தெரியவந்தது. இவ்வழக்கில் பண்ருட்டி திருநகர் சுதர்சனன்(42),சத்தியநாராயணன் இருவரும் வானூர் கோர்ட்டில் சரணடைந்தனர். மேலும் நேற்றுமுன் தினம் கூலிப்படையைச் சேர்ந்த மாரி (எ) சார்லஸ்(27), மணவெளி ரமேஷ் (35), கீழ்கவரப்பட்டு பிரபு(49) ஆகிய மூவரை கைது செய்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கடலூர் ரியல் எஸ்டேட் அதிபர் அன்பழகன், புதுச்சேரி சக்தி நகர் ராஜா (எ) காமராஜ், சிவா (எ) சிவநேசன், வானூர் மொரட்டாண்டி பாஷா (எ) பரதன், கார் டிரைவர் வேல் (எ) வடிவேல் உள்ளிட்ட 14பேர் மீது கொலை மற்றும் சதி திட்டம் திட்டியதாக வழக்குபதிந்து தேடி வந்தனர். இந்த வழக்கில் தனிப்படை போலீசார் நேற்று கடலூர் பாரதி ரோட்டில் புதுச்சேரி நவசக்திநகர் சிவா (33), வானூர் மொராட் டாண்டி பாஷா(30) ஆகிய இருவரை கைது செய்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக