உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஆகஸ்ட் 09, 2010

கடலூரில் காவலர், வார்டன், தீயணைப்புவீரர்களுக்கான தேர்வு: 7,104 பேர் பங்கேற்பு



கட​லூர் மஞ்​சக்​குப்​பம் புனித வள​னார் மேல்​நி​லைப் பள்​ளி​யில் நடந்த 2-ம் நிலை காவ​லர்​க​ளுக்​கான எழுத்​துத் தேர்​வைப் பார்வை​யி​டும் கட​லூர் மாவட்ட எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ்


கடலூர்:

          கடலூரில் நடந்த காவலர், வார்டன், தீயணைப்பு வீரர்களுக்கான தேர்வில் மாவட்டத்திலிருந்து 7 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

             தமிழகத்தில் உள்ள காவலர், சிறைத்துறை, தீயணைப்புத்துறை ஆகியவற்றில் ஏற்படும் காலி பணியிடங்களை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் மூலம் எழுத்துத்தேர்வு  நடத்தி நிரப்பப்படுகிறது. தற்போது இம் மூன்று துறைகளிலும் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப மாவட்டம் தோறும் எழுத்துத் தேர்வு நேற்று நடந்தது. கடலூர் மாவட்டத்திலிருந்து 7,104 பேர் நேற்று எழுத்துத் தேர்வில் பங்கேற்றனர். அவர்களில் 856 பேர் பெண்கள்.

             கடலூரில் 2 மையங்களில் தேர்வு நடந்தது. செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஆண்கள் 5,000 பேரும், புதுப்பாளையம் புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஆண், பெண் 2,104 பேரும் தேர்வு எழுதினர். எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் தேர்வு ஹாலை பார்வையிட்டு கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் பற்றி ஒலிப்பெருக்கி மூலம் அறிவுரை வழங்கினார்.

இது குறித்து எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் கூறியதாவது:

                  இரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை, தீயணைப்புத் துறையில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளன. அவற்றை நிரப்புவதற்காக இந்த எழுத்துத் தேர்வு நடத்தப்படுகிறது. மொத்தம் 80 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. தேர்வு எழுத 80 நிமிடம் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கேள்வியும் ஒரு நிமிடத்தில் பதிலளிக்க வேண்டும். ஒரு பெஞ்சில் 4 பேர் எழுதினால் கூட ஏ, பி, சி, டி, என 4 விதமான கேள்வித் தாள் வழங்கப்பட்டுள்ளன. அதில் அனைத்து கேள்விகளும் இடம் பெற்றிருந்தாலும் கேள்விகள் இடம் மாறி இருக்கும். எனவே அருகில் இருந்தாலும் காப்பியடிக்க முடியாது. இதில் 50 வினாக்கள் பொது அறிவைப் பற்றியும், 30 கேள்விகள் திறன், அடிப்படை கணிதம் பற்றியும் கேட்கப்பட்டுள்ளது' என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior