கடலூர்:
கடலோர பாதுகாப்பை தீவிரப்படுத்த, கடலோர காவல் படை போலீசாருக்கு மற்றொரு அதிவேக விசைப்படகு வழங்கப்பட்டுள்ளது.
மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்குப் பின், கடலோரப் பகுதி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக கடலோரப் பகுதியிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்துப்பட்டுள்ளது. கடலோர காவல் படையினருக்கு இதற்கு முன், நவீன இரண்டு இன்ஜின் உள்ள ஐந்து டன் திறனுள்ள படகு வழங்கப்பட்டிருந்தது. அதன் மூலம் கடலில் வெகு தூரம் சென்று கண்காணித்து வருகின்றனர்.
தற்போது மேலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தும் விதமாக அரசு, மற்றொரு 12 டன் எடை கொண்ட அதிநவீன படகு ஒன்றை வழங்கியுள்ளது. டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட இந்தப் படகு மணிக்கு 35 நாட்டிக்கல் மைல் வேகத்தில் செல்லும். இதன் மூலம் கடலில் வெகு தூரத்தில் வருபவர்களை எளிதாக கண்காணிக்க வசதியாக, படகில் மேல்தளம் அமைக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளை விரட்டிச் சென்று பிடிப்பதற்கு பல வசதிகள் இந்த படகில் அமைக்கப்பட்டுள்ளன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக