சிதம்பரம்:
வீராணம் ஏரியில் தண்ணீர் வரத்து இல்லாததால், நீர்மட்டம் வெகுவாக குறைந்து குளம்போல் காணப்படுகிறது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதி விவசாயிகளின் உயிர்நாடியாக விளக்குவது வீராணம். கோடை காலங்களில் தண்ணீர் வற்றி பாலைவனமாக மாறிவிடும். ஆனால், சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதையொட்டி, கடந்த சில ஆண்டுகளாகவே வீராணம் வற்றாமல் கோடையிலும் தண்ணீர் சேமித்து வைக்கப்படுகிறது. தற்போது, ஏரியின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. மொத்த கொள்ளளவான 47.5 அடி உயரத்தில், 40 அடிக்கு மட்டுமே தண்ணீர் உள்ளது. இதனால், வீராணம் ஏரி பாசி செடிகள் வளர்ந்து, வறண்ட குளம் போல் காணப்படுகிறது. இருந்தும் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் பாதிப்பு ஏற்படவில்லை. இதற்கிடையே, வரும் 11ம் தேதி, கீழணையில் தண்ணீர் திறக்கப்படும் நிலையில், விரைவில் ஏரி நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக