உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஆகஸ்ட் 09, 2010

நீண்ட இழுபறிக்கு பின் நொச்சிக்காடு பாலம் பணி துவங்கியத

கடலூர்:

             கடலூர் அடுத்த நொச்சிக்காடு - செம்மங் குப்பம் இடையே உப்பனாற்றின் மீது 7.14 கோடி ரூபாய் மதிப்பில் உயர் மட்ட பாலம் கட்டும் பணி நான்கு ஆண்டு இழுபறிக்கு பின் மீண்டும் துவங்கியது.

              கடலூர் அடுத்த நொச்சிக்காடு கிராமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தியாகவல்லி, நடுத்திட்டு, சித்திரைப்பேட்டை, தியாகவல்லி, திருச்சோபுரம், தம்மனாம்பேட்டை உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கடலூர் உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்வதற்கு கம்பளிமேடு, ஆலப்பாக்கம் வழியாக 7 கி.மீ., தூரம் சுற்றி கடலூர் - சிதம்பரம் சாலைக்கு வர வேண்டும்.  இல்லையெனில் நொச்சிக்காட்டிலிருந்து உப்பனாறு வழியாக படகு மூலம் செம்மங்குப் பம் வந்து கடலூர் - சிதம்பரம் சாலையை அடைய வேண்டும்.

               இரவு நேரங்களில் விஷக்கடி, பிரசவம் உள் ளிட்ட அவசர தேவைகளுக்கு மருத்துவமனைகளுக்கு செல்வதற்கும், வெளியூர்களுக்கு செல்லவும் அப்பகுதி கிராம மக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வந்தனர். இந்நிலையில் செம்மங்குப்பத் தில் இருந்து நொச்சிக்காடு வழியாக சென்றுவர உப்பனாற்றின் மீது உயர் மட்ட பாலம் கட்டித்தர வேண் டும் என அப்பகுதி கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கை இருந்து வந்தது.இதனையடுத்து கடந்த 2006ம் ஆண்டு நொச்சிக் காடு உப்பனாற்றின் மீது உயர் மட்ட பாலம் கட்டுவதற்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், அப்போதையை கலெக்டர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் அடிக்கல் நாட்டினர். 

              அடிக்கல் நாட்டிய பின் கடந்த நான்கு ஆண்டுகளாக எந்தவித பணிகளும் துவங்காமல் பாலம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டது.இதனால் நொச்சிக்காடு உட்பட பல கிராமங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தினமும் உப்பனாறு வழியாக படகு மூலம் செம்மங்குப்பத்தை அடைந்து பள்ளிக்குச் சென்று வந்தனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன் உப்பனாற்றில் படகு கவிழ்ந்ததில் 10க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் தண்ணீரில் மூழ்கி அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர். படகு கரையோரத்தில் கவிழ்ந்ததால் பெரிய அளவிலான உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

            இதனையடுத்து பள்ளி மாணவர்களின் நலன் கருதி அப்பகுதி கிராம மக்கள் நொச்சிக்காடு பாலம் கட்டுமான பணியை விரைந்து துவக்க வேண் டும் என மீண்டும் கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் எம்.பி., தொகுதி நிதி மற்றும் சுனாமி நிதி ஆகியவற்றின் மூலம் 7 கோடியே 14 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அனுமதி பெறப்பட்டு நொச்சிக்காடு - செம்மங்குப்பத்திற்கு இடையே உப்பனாற்றில் உயர் மட்ட பாலம் கட்டும் பணி தற்போது துவங்கப்பட்டுள்ளது. உப்பனாற்றின் குறுக்கே செம் மண் அடிக்கும் பணி 75 சதவீதம் முடிவடைந்துள்ளது. 

                 விரைவில் உப்பனாற்றில் பள்ளம் தோண்டப்பட்டு பில்லர்கள் எழுப்பும் பணி நடைபெற உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட இப்பணி இந்த முறையாவது தடைபடாமல் நடந்து உயர் மட்ட பாலம் விரைவில் கட்டி முடிக்கப்பட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. வரும் 2011ம் ஆண்டு பிப்ரவரி 25ம் தேதிக்குள் பாலம் கட்டும் பணியை முடிக்க திட்டமிடப்பட்டது. இப்பகுதியில் உயர் மட்ட பாலம் கட்டப்பட்டால் நொச்சிக்காடு, தியாகவல்லி, நடுத்திட்டு, சித்திரைப்பேட்டை, தியாகவல்லி, திருச்சோபுரம், தம்மனாம்பேட்டை உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior