உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஆகஸ்ட் 09, 2010

திட்டக்குடி அருகே வாலிபரை கைது செய்ய எதிர்ப்புபோலீஸ் மீது கல்வீச்சு: எஸ்.ஐ., காயம்


திட்டக்குடி:

            திட்டக்குடி அருகே வாலிபரை கைது செய்ய முயன்ற போலீசார் மீது கல்வீசி தாக்கியதால் பதட்டம் ஏற்பட்டது.  கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த தொளார் காலனியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர் வீரமணி (17) மற்றும் அவரது நண்பர்களையும் கடந்த 4ம் தேதி அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் தாக்கினர். இது குறித்து ஆவினங்குடி போலீசார் வழக்குப் பதிந்து வெங்கடேசன் (22), மணிகண்டன் (20) ஆகியோரை கைது செய்தனர்.

                 இந்நிலையில் எதிர் தரப்பில் காலனியைச் சேர்ந்த தேவேந்திரன் மகன் ஆனந்தராஜை (21) கைது செய்ய நேற்று மாலை மாவட்ட அதிவிரைவுப்படை போலீசார் 20க்கும் மேற்பட்டோர் தொளார் காலனிக்குச் சென்றனர்.அ ப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆனந்தராஜை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. இதனையடுத்து அதிவிரைவுப்படை போலீசார் அனைவரையும் விரட்டியடித்து ஆனந்தராஜை கைது செய்து வேனில் ஏற்றினர். ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். அதில் போலீஸ் வாகனம் கண்ணாடி உடைந்து சப் இன்ஸ்பெக்டர் பழனி காயமடைந்தார். தொடர்ந்து அப்பகுதியில் பதட்டம் நீடிப்பதால் தொளார், ஆவினங்குடி பகுதிகளில் அதிவிரைவுப் படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior