சிதம்பரம் :
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு பெண்கள் பள்ளியில் தொல்லியல் மன்றம் சார்பில் கும்பகோணம் சோழ மண்டல நாணயவியல் கழகத்தின் நாணயம் மற்றும் ஸ்டாம்பு கண்காட்சி நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் ராஜன் துவக்கி வைத்தார். கண்காட்சியில் ஆங்கிலேயர் காலத்திய நாணயங்கள் முதல் தற்போதுள்ள நாணயங்கள் வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாணயங்கள் இடம் பெற்றன. பல்வேறு நாடுகளின் ஸ்டாம்புகள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது. 3,000க்கும் மேற்பட்ட மாணவிகள் கண்காட்சியை பார்த்து நாணயங்கள் மற்றும் ஸ்டாம்புகள் பற்றி தெரிந்து கொண்டனர். சோழ மண்டல நாணவியல் கழக லட்சுமி நாணயம், ஸ்டாம்புகளை சேகரிக்கும் ஆர்வத்தை மாணவிகள் மத்தியில் ஏற்படுத்துவது குறித்து விளக்கமளித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக