கடலூர் :
கடலூரில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சிப்காட் கெமிக்கல் கம்பெனிகள் வெளியிடும் கழிவுகளால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கிறது. இதனால் விவசாயம் பாதிக்கிறது. சுற்றுச் சூழலை பாதிக்கும் கம்பெனிகள் மீது மாவட்ட மாசுக் கட்டுப் பாட்டு வாரியம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என் பதை வலிறுத்தி சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம், டி.ஒய். எப்.ஐ., உள்ளிட்ட சங்கங்கள் சார்பில் கடலூர் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறியலாளர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப் பாட்டம் நடந்தது.
ஒன்றிய கவுன்சிலர் தட்சணாமூர்த்தி தலைமை தாங்கினார். டி.ஒய். எப்.ஐ., நகர செயலாளர் அமர்நாத், ஒன்றிய செயலாளர் சிவானந்தம், ஒன்றியத் தலைவர் நேதாஜி, மனோரஞ்சிதம், தனுசு, வேல்முருகன், கிருஷ்ணமூர்த்தி, குமார் முன்னிலை வகித்தனர். துரைராஜ், வாலண்டினா, மருதவாணன், பால்கி, ராஜேஷ் கண்ணன், திருமுருகன், பாபு பங்கேற்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக