கடத்தப்பட்ட அரிசி மூட்டைகளை பார்வையிடும் வருவாய் துறையினர் மற்றும் போலீஸார்.
பண்ருட்டி:
நெய்வேலியில் இருந்து புதுச்சேரிக்கு கடத்தப்பட்ட 12 டன் ரேஷன் அரிசி ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
நெய்வேலியில் இருந்து லாரியில் அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீத்தாராமன், வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன் அளித்த தகவலின் பேரில் பண்ருட்டி டி.எஸ்.பி. ஆர்.பிரசன்னகுமார், வட்டாட்சியர் பி.பன்னீர்செல்வம் ஆகியோர் சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் பண்ருட்டி லட்சுமி விலாஸ் வங்கி அருகே வந்த லாரியை ஆய்வு செய்ததில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து செஞ்சி வட்டம் ஏகாநெமிலி கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் ஆறுமுகத்தை கைது செய்து விசாரணை நடத்தியதில் நெய்வேலியில் இருந்து புதுச்சேரிக்கு செல்வதாக கூறியுள்ளார்.பறிமுதல் செய்யப்பட்ட லாரி மற்றும் அரிசியை குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக