கடலூர்:
கலைஞர் காப்பீடுத் திட்டத்தில் கடலூர் அரசு மருத்துவமனையிலும் அண்மைக்காலமாக அறுவை சிகிச்சை நடந்து வருவதாக, மருத்துவத் துறை இணை இயக்குநர் டாக்டர் பா.கமலக்கண்ணன் தெரிவித்தார்.
கலைஞர் காப்பீடுத் திட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில்தான் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு வருகின்றன. பொதுமக்களும் தனியார் மருத்துவமனைகளையே நாடிச் செல்கின்றனர். இந்நிலையில் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் கடலூர் அரசு மருத்துவமனையில் அண்மையில் அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன.
இது குறித்து மருத்துவத் துறை இணை இயக்குநர் பா.கமலக்கண்ணன் சனிக்கிழமை கூறியது:
கலைஞர் காப்பீடுத் திட்டத்தில் கடந்த 14-ம் தேதி விழுப்புரத்தைச் சேர்ந்த குருபாகரனுக்கு (38), இணை இயக்குநர் டாக்டர் கமலக்கண்ணன் தலைமையில், எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர் விஜய்ஆனந்த் தம்பையா அறுவை சிகிச்சை செய்தார். கடலூர் அரசு மருத்துவமனையில் கலைஞர் காப்பீடுத் திட்டத்தில் எலும்பு முறிவு சிகிச்சை மட்டுமன்றி, கருப்பை அகற்றுதல், கண்ணில் உயர் நீரழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கும் அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. பொதுமக்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக