உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 22, 2010

கடலூர் வடிகால்களில் அடைப்பு: 30 நகர்களுக்கு வெள்ளப் பாதிப்பு


மழைநீருடன் சாக்கடை நீரும் வழிந்தோட வாய்ப்பு இல்லாதவாறு அடைபட்டுக் கிடக்கும், கடலூர் வண்டிப்பாளையம் சாலையில் உள்ள வடிகால் வாய்க்கால் பாலம்.
 
கடலூர் : 

                 கடலூரில் மழைநீர் வடிகால் வாய்க்கால் அடைபட்டுக் கிடப்பதால், 30-க்கும் மேற்பட்ட நகர்களுக்கு மழையினால் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

                   கடலூர் அருகே திருவந்திபுரம் அணையில் இருந்து சின்ன வாய்க்கால், பெரிய வாய்க்கால் என்று இரு வாய்க்கால்கள் உள்ளன. இவை கடலூர் நகராட்சி வழியாக ஓடி, கெடிலம் ஆற்றில் கலக்கின்றன. நகரின் பிரதான வடிகால் வாய்க்கால்களாகவும் இவை உள்ளன.40 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த வாய்க்கால்கள் இரண்டும், 3 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களுக்குப் பாசன வாய்க்கால்களாக இருந்தன. காலப்போக்கில் இந்த விளை நிலங்கள் எல்லாம், லே-அவுட்களாக மாறி, ஆயிரக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டுவிட்டன.

                 நிலங்கள் வீடுகளாக மாறினாலும் வாய்க்கால்கள் அடைபடாமலும் ஆக்கிரமிக்கப்படாமலும் இருந்தால், செüடாம்பிகை நகர், எஸ்.எஸ்.ஆர். நகர், சரவணன் நகர், பி.டி.கார்டன் நகர், தானம் நகர், ராமநாதன் நகர் உள்ளிட்ட  30க்கும் மேற்பட்ட நகர்களுக்கு வடிகால்களாக பயன்பட்டு இருக்கும். ஆனால் இந்த இரு வாய்க்கால்களும் பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டும், பராமரிப்பு இன்றி அடைபட்டு குறுகலாகவும் மாறிவிட்டன.

                 5 ஆண்டுகளுக்கு முன், மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து | 20 லட்சம் ஒதுக்கியும், பணிகள் முழுமை அடையவில்லை. மேலும் சின்ன வாய்க்கால் செல்லும் பகுதிகளில் வாய்க்கால் பாலங்கள் பலவற்றை, நகராட்சி முறையாக பராமரிக்காததால் அடைபட்டுக் கிடக்கின்றன. வண்டிப்பாளையம் நெடுஞ்சாலையில் உள்ள பிரதான பாலம், அண்மையில் பாதாளச் சாக்கடைக்காக தோண்டப்பட்டபோது சிதைந்து விட்டது. ஆனால் நெடுஞ்சாலைத்துறை அதை சீரமைக்காமல் அப்படியேமூடி, சாலையைப் போட்டுவிட்டது. 

                  இதனால் அதன் வழியாக வெள்ளம் வடிய வாய்ப்பில்லாமல் போய்விட்டது.வண்டிப்பாளையம் நெடுஞ்சாலையில் உள்ள பாலம் பராமரிப்பு இன்றி தூர்ந்து, வெள்ளம் வடிவது தடைபட்டுக் கிடக்கிறது. இதே சாலையில் உள்ள மேலும் பல சிறிய பாலங்கள் அடைபட்டு வெள்ள நீர் வடியமுடியாத நிலை உருவாகி இருக்கிறது. இதனால் வண்டிப்பாளையம் சாலைக்கு மேற்கில் உள்ள, 30-க்கும் மேற்பட்ட நகர்களில் மழை வெள்ளம் வடியாமல் தேங்கத் தொடங்கி உள்ளது. ஏற்கெனவே 300-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது.

                தொடர்ந்து மழை பெய்தால், இந்த நகர்களில் வசிப்போர், வீடுகளைவிட்டு  வெளியே வரமுடியாத நிலை ஏற்படும் என்று, கடலூர் அனைத்து நகர குடியிருப்போர் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலர் மு.மருதவாணன் அச்சம் தெரிவித்தார்.

துகுறித்து நகராட்சித் தலைவர் து.தங்கராசு கூறியது

                      பாலங்கள், வாய்க்கால்களில் உள்ள அடைப்புகளை அகற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior