உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 22, 2010

கடலூர் வழியாக இன்று முதல்18 சிறப்பு ரயில்கள்

கடலூர் : 

                சென்னையில் இருந்து கடலூர் வழியாக ராமேஸ்வரம், திருநெல்வேலி, செங்கோட்டைக்கு இன்று முதல் மழைக்கால சிறப்பு ரயில்களை இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது. 

              சென்னை எழும்பூரில் இருந்து கடலூர் வழியாக தற்போது திருச்சி, வாரணாசி - ராமேஸ்வரம்,  புவனேஸ்வர் - ராமேஸ்வரம், எழும்பூர் - ராமேஸ்வரம் ஆகிய இடங்களுக்கு விரைவு ரயில்கள் இயக்கப்படுகிறது. தற்போது கடலூர் வழியாக இன்று முதல் 18 புதிய மழைக்கால சிறப்பு ரயில்களை இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது. இன்று காலை 6.30 மணிக்கு எழும்பூரில் (எண் 6011)  புறப்பட்டு, திருப்பாதிரிப்புலியூரில் 10.10க்கு வந்து சேரும். 23ம் தேதி காலை 8 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும். 23ம் தேதி மாலை 6.15 மணிக்கு ராமேஸ்வரத்தில் (6012) புறப்பட்டு திருப்பாதிரிப்புலியூருக்கு 24ம் தேதி காலை 4.10 மணிக்கும், எழும்பூருக்கு 8.50 மணிக்கு சேரும்.

                  எழும்பூரில் (6009) 24ம் தேதி மாலை 3.10 மணிக்கு புறப்பட்டு திருப்பாதிரிப்புலியூருக்கு 6.35 மணிக்கும், ராமேஸ்வரத்திற்கு மறுநாள் காலை 5 மணிக்கு சேரும். ராமேஸ்வரத்திலிருந்து 25ம் தேதி (6010) மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் திருப்பாதிரிப்புலியூருக்கு காலை 4.10க்கும், எழும்பூருக்கு 8.50க்கு சேரும். சென்னை எழும்பூரில் (6101) 29ம் தேதி மாலை 6.50 மணிக்கு புறப்பட்டு, திருப்பாதிரிப்புலியூருக்கு இரவு 10.05 மணிக்கும், மறுநாள் காலை 8 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும். 

                  ராமேஸ்வரத்திலிருந்து (6102) 30ம் தேதி மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு திருப்பாதிரிப்புலியூருக்கு காலை 4.10மணிக்கும், சென்னை எழும்பூருக்கு 8.30  சென்றடையும். சென்னையில் இருந்து  (6103) 1.12.2010 ம் தேதி மாலை 3.10க்கு புறப்பட்டு திருப்பாதிரிப்புலியூருக்கு மாலை 6.35 மணிக்கும், மறுநாள் காலை 5.20 மணிக்கு ரமேஸ்வரம் சென்றடையும்.

                    ராமேஸ்வரத்தில் (6104) 2ம் தேதி மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு, திருப்பாதிரிப்புலியூருக்கு காலை 4.10 மணிக்கும், எழும்பூருக்கு 8.50மணிக்கும் சென்றடையும். மறுநாள் 3ம் தேதி (6105) அங்கிருந்து இரவு 11.30மணிக்கு புறப்பட்டு திருப்பாதிரிப்புலியூருக்கு 3.55 மணிக்கும், ராமேஸ்வரத்திற்கு இரவு 2 மணிக்கும் போய்ச்சேரும். ராமேஸ்வரத்திலிருந்து 4ம் தேதி இரவு 7.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் திருப்பாதிரிப்புலியூருக்கு 4.45 மணிக்கும் சென்னைக்கு காலை 10 மணிக்கும் சேரும். மறுநாள் 5ம் தேதி அங்கிருந்து இரவு 8.20 மணிக்கு புறப்பட்டு திருப்பாதிரிப்புலியூருக்கு இரவு 11.40 மணிக்கும், மறுநாள் காலை 9.05 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும்.

                   ராமேஸ்வரத்தில் இருந்து 6ம் தேதி (6108) இரவு 7.15 மணிக்கு புறப்பட்டு திருப்பாதிரிப்புலியூருக்கு மறுநாள் காலை 4.45 மணிக்கும், சென்னைக்கு 10 மணிக்கும் சேரும். 

செங்கோட்டை விரைவு ரயில்: 

                 வரும் 29ம் தேதி முதல் எழும்பூரிலிருந்து மாலை 3.10 மணிக்கு புறப்பட்டு திருப்பாதிரிப்புலியூருக்கு 6.35 மணிக்கும், செங்கோட்டைக்கு மறுநாள் காலை 6.15 மணிக்கு சேரும். அங்கிருந்து 30ம் தேதி செங்கோட்டையில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு திருப்பாதிரிப்புலியூரில் மறுநாள் காலை 3.55 மணிக்கும், சென்னைக்கு 8.50மணிக்கும் சேரும்.

                    31ம் தேதி எழும்பூரில்(6117) இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு திருப்பாதிரிப்புலியூருக்கு 3.55 மணிக்கும், செங்கோட்டைக்கு 2.30 மணிக்கு சேரும். திருநெல்வேலி விரைவு ரயில்: 17.11.2010 முதல் 15.12.2010ம் தேதி வரை புதன் கிழமைகளில் எழும்பூரில் இருந்து இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு திருப்பாதிரிப்புலியூருக்கு 1.55 மணிக்கும், திருநெல்வேலிக்கு மறுநாள் 12.15 மணிக்கு சேரும். 18.11.2010 முதல் 16.12.2010 வரை வியாழக் கிழமைகளில் திருநெல்வேலியிலிருந்து (6014) மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு திருப்பாதிரிப்புலியூருக்கு இரவு 1.55 மணிக்கும், எழும்பூருக்கு காலை 6 மணிக்கு சேரும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior